புதுச்சேரியில் கனக செட்டிகுளம் முதல் மூர்த்தி குப்பம் வரை 18 மீனவ கிராமங்கள் உள்ளன. தற்போது புதுச்சேரியில் பல்வேறு மீனவ கிராம மீனவர்கள் சுருக்கு வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்துவருகின்றனர்.
மத்திய அரசின் தடையை மீறி மீனவர்கள் மீன்பிடித்து வருவதைக் கண்டிக்கும் வகையில், புதுச்சேரி அரசு மீன்வளத் துறை, சுருக்கு வலையைப் பயன்படுத்த தடைசெய்யப்பட்டிருந்தது.
இதனைக் கண்டித்து புதுச்சேரி விசைப்படகு மீனவர்கள் சங்கம் சார்பில் கடற்கரைச் சாலை காந்தி சிலையிலிருந்து தலைமைச் செயலகம் வரை நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் கறுப்புக் கொடி கட்டி சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்
ஃபைபர் படகுகள், எஃப்.ஆர்.பி. (FRB) படகுகள், விசைப்படகுகள் உள்ளிட்டவற்றில் கறுப்புக் கொடி கட்டி கடலில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டபோது, ஒரு சில மீனவர்கள் கடலில் இறங்கி கறுப்புக்கொடி காட்டி அரசுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
மீனவர்களின் போராட்டம் காரணமாக எந்தவித அசம்பாவிதம் நடைபெறாமலிருக்க, புதுச்சேரி கடற்கரைச் சாலை முழுவதும் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இப்போராட்டம் சுமார் ஒரு மணி நேரம் வரை நடந்தது.
இதையும் படிங்க: 'புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் விதை வெங்காய மூட்டைகள் தேக்கம்'