காரைக்காலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 14 பேர் இலங்கைக் கடற்படையினரால் கடந்த 26ஆம் தேதி சிறைப்பிடிக்கப்பட்டனர். இது குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேசி துரித நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
இதையடுத்து மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைப் படகுகளுடன் மீட்டனர். இந்த நிலையில் மீட்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் புதுச்சேரி வந்தனர். அவர்கள் ஆளுநர் மாளிகையில் துனணநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'தாமரைக்கு வாக்களிக்க எண் 3 அழுத்தவும்' - ஹெச். ராஜாவின் மூன்றெழுத்து மந்திரங்கள்!