வரும் கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வெங்கரா தொகுதியில், ஜனநாயக சமூக நீதிக் கட்சியின் வேட்பாளராக திருநங்கை அனன்யா குமாரி அலெக்ஸ் (28) போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் அனன்யா தான் தேர்தலிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அனன்யா கூறுகையில், "தான் போட்டியிடத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக சமூக நீதிக் கட்சியிலிருந்து களங்கம், பாலின பாகுபாடு, பாலியல் அச்சுறுத்தல்கள் வந்தன.
இந்தக் கட்சியின் தலைமை விளம்பரத்திற்காக என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர். அத்துடன் எதிர்க்கட்சியினர் குறித்து மோசமான, பொய்யான குற்றச்சாட்டுகளை வைக்க என்னைக் கட்டாயப்படுத்தினர்.
இல்லயென்றால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி முடிந்தாலும், நான் இதனை இனிமேல் தொடரப்போவதில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேரளா: வெங்கரா தொகுதியில் முதல்முறையாக திருநங்கை வேட்பாளர் போட்டி