ETV Bharat / bharat

'2021இன் முதல் சூரிய கிரகணத்தால் பொருளாதாரம் சரிவைச் சந்திக்கலாம்' - கணிக்கும் ஜோதிடர்! - ஜோதிடர் பங்கஜ் கன்னா

டெல்லி: 2021இல் வரவுள்ள சூரிய கிரகணத்தின் காரணமாகப் பொருளாதாரம் வீழ்ச்சியடைவது மட்டுமின்றி ஆளும் கட்சிகளிடையே அமைதியின்மை ஏற்படவும் வாய்ப்புள்ளது என ஜோதிடர் பங்கஜ் கன்னா கணித்துள்ளார்.

ஜோதிட
ஜோதிட
author img

By

Published : Jan 9, 2021, 6:57 PM IST

சூரியன், சந்திரன், பூமி ஒரே நேர்க்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் வரும் ஜூன் 10ஆம் தேதி தென்படவுள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

இந்தக் கிரகணத்தை வடஇந்தியாவில் உள்ள காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம் போன்ற ஒரு சில பகுதிகளில் மட்டுமே பார்க்க முடியுமாம். இந்தியா தவிர, இந்த முதல் சூரிய கிரகணத்தின் தாக்கம் அமெரிக்கா, ஐரோப்பா, கிரீன்லாந்து, ரஷ்யா, கனடா ஆகிய நாடுகளில் அதிகளவில் இருக்கக்கூடும். கிரகணம் நிகழும் இடங்களில் உள்ள மக்கள், சூரியனை இருட்டாகப் பார்ப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

டெல்லியைச் சேர்ந்த ஜோதிடரான பங்கஜ் கன்னா, "2021 ஜூன் 10ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணம் பொருளாதார மந்தநிலையை ஏற்படுத்தும். ஆகஸ்ட் 2022 வரை இந்தக் கிரகணத்தின் தாக்கம் நீடிக்கும். அதன் பின்னர்தான் எதிர்மறைத் தாக்கம் மெதுவாகக் குறையும்.

அப்போது, சனி கிரகம் வலுவாக மாறுவதால் தொழில்நுட்ப வளர்ச்சி, புதுமைகள் போன்றவைகளுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். அதே சமயம், சூரியன் பலவீனமாகிவிடுவதால் ஆளும் அரசாங்கமும் அதனுடன் தொடர்புடைய மக்களும் கடினமான சூழ்நிலையைச் சந்திக்க நேரிடும்" எனக் கணித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.