மாகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 63 வயதான பெண் ஒருவருக்கு ஜூலை 21ஆம் தேதி கரோனா தொற்று பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.
தொடர்ந்து ஜூலை 27ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே ஆகஸ்ட் 11ஆம் தேதி, மும்பை மாநகராட்சி நிர்வாகம், உயிரிழந்தப் பெண்ணுக்கு டெல்டா ப்ளஸ் தொற்று பாதிப்பு இருந்ததை உறுதி செய்துள்ளது.
மும்பையில், டெல்டா ப்ளஸ் கரோனா தொற்றால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும். குறிப்பாக இவருக்கு கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டிருந்தது. டெல்டா பிளஸ் காரணமாக மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக ரத்னகிரியில் 80 வயது பெண் ஒருவர் ஜூன் 13ஆம் தேதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் பாதிப்பு அதிகரிப்பு