சமஸ்திபூர் (பிகார்): முஃபாசில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட துத்புராவைச் சேர்ந்த பிரபாத் சவுத்ரி நீம் சக்ரா மற்றும் பிரபாத் குமார் ஆகிய இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுபானம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கைதிகளான பிரபாத் சவுத்ரி நீம் சக்ரா மற்றும் பிரபாத் குமார் ஆகிய இருவரையும் பிகாரில் உள்ள சமஸ்திபூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இன்று (ஆகஸ்ட் 26) காவல் துறையினர் அவர்களை அழைத்து வந்தனர். அப்போது, திடீரென ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல் ஒன்று நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்து உள்ளது.
அதனைத் தொடர்ந்து, அந்த மர்ம கும்பல் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளை வைத்து கைதிகளான பிரபாத் சவுத்ரி நீம் சக்ரா மற்றும் பிரபாத் குமாரை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் கைதிகள் இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
இதையும் படிங்க: Tamilisai Soundararajan: கொடுக்கின்ற மசோதாவிற்கு எல்லாம் ஸ்டாம்ப் ஒட்ட ஆளுநர்கள் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் இல்லை - தமிழிசை சௌந்தரராஜன்!
இதனால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, பொதுமக்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாகச் சிதறி ஓட்டம் பிடித்து உள்ளனர். இந்த கூட்டத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம கும்பல், அங்கிருந்து தப்பித்ததாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து, காயமடைந்த கைதிகள் இருவரும் சிகிச்சைக்காக சதர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சதர் டிஎஸ்பி சஞ்சய் குமார் பாண்டே தலைமையிலான காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
இதையும் படிங்க: UP Slap Video: சிறுபான்மை மாணவரை அறையச் சொன்ன ஆசிரியை மீது வழக்குப்பதிவு!