ஜம்மு காஷ்மீர் உதம்பூர் மாவட்டம் ஷிவ் நகர் பகுதியில் அமைந்துள்ள இருசக்கர வாகன ஷோ ரூமில் நேற்றிரவு (நவ.14) திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மூன்று தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த மீட்புக் குழுவினர் இன்று (நவ.15) தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் மூன்று தீயணைப்பு வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் ஏற்பட்ட பொருள்சேதம் குறித்த தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
இதையும் படிங்க: மும்பை உணவகத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து!