ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தில் நேற்று (செப்டம்பர் 12) நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 10 படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செகந்திராபாத் போலீசார் தரப்பில், "இந்த தீ விபத்து கட்டடத்தின் முதல் தளத்தில் உள்ள மின்சார வாகன ஷோரூமில் தொடங்கியது. இதனால் 2ஆம் தளத்தில் இருந்த விடுதிக்கும் தீ பரவியது.
அப்போது 23 பேர் அங்கு தங்கி இருந்தால் சம்பவயிடத்தில் 3 பேரும், மருத்துவமனையில் 5 பேரும் உயிரிழந்தனர். இதில் விஜயவாடாவைச் சேர்ந்த ஏ.ஹரீஷ், சென்னையைச் சேர்ந்த சீதாராமன், டெல்லியைச் சேர்ந்த வீடேந்திரா ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதம் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துகொண்டது உடன் நிவாரணத்தையும் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தெலங்கானா மாநிலம் செகந்திராபாதில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காதலுக்கு மறுப்புத்தெரிவித்த தம்பியை காதலனுடன் சேர்த்துக்கொலை செய்த சகோதரி