ETV Bharat / bharat

ரயிலில் உள்ளாடையுடன் திரிந்த எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு! - ஜேடியு கட்சி எம்எல்ஏ

ரயிலில் உள்ளாடையுடன் திரிந்ததற்காகவும், சக பயணியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதற்காகவும் ஐக்கிய ஜனதா தள கட்சி எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு
author img

By

Published : Sep 5, 2021, 4:12 PM IST

Updated : Sep 5, 2021, 4:22 PM IST

பிகாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ கோபால், மண்டல் ரயில் பயணத்தின்போது உள்ளாடையுடன் திரியும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாட்னாவிலிருந்து டெல்லிக்குச் சென்ற தேஜஸ் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்னதாக எம்எல்ஏ கோபால் பயணித்தார். இதைக் கண்ட சக பயணிகள், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர் பயணிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன.

JDU MLA
ஜேடியு கட்சி எம்எல்ஏ கோபால் மண்டல்

இந்நிலையில், ஜேடியு எம்எல்ஏ கோபால் மண்டல் மீது ஆரா ஜிஆர்பி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து குணால் சிங், திலீப் குமார், விஜய் மண்டல் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கம் அளித்த கோபால் மண்டல், "நான் உள்ளாடை அணிந்திருந்தேன். ரயிலில் ஏறியவுடன் எனக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. கழிவறைக்குச் சென்றேன். நான் பொய் சொல்லவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உலக தலைவர்களை மிஞ்சிய மோடி... மக்கள் ஆதரவில் டாப்!

Last Updated : Sep 5, 2021, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.