ETV Bharat / bharat

வீட்டுக்கடன் சுமையாக உள்ளதா? விடுபட சில டிப்ஸ்..! - வீட்டுக்கடன் பெறும் போது கடைபிடிக்க வேண்டியவை

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதச் சுமையானது ஒவ்வொரு ஆண்டும் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்ந்து வரும் இத்தகைய சூழ்நிலையில் மக்கள் அதிகரித்து வரும் வட்டி விகிதங்களிலிருந்து தப்பிக்க சில வழிகளை இந்த தொகுப்பில் காணலாம்.

வீட்டுக்கடன் சுமையாக உள்ளதா
வீட்டுக்கடன் சுமையாக உள்ளதா
author img

By

Published : Oct 20, 2022, 10:03 PM IST

ஹைதராபாத்: அன்றாட வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும் தவணை முறை மூலம் நிரப்பிக் கொள்ளும் வசதி தற்போது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே வீடுகளையும் தனியார் மற்றும் அரசு வங்கிகளின் மூலமோ அல்லது தனியார் கடன் வழங்கும் நிறுவனங்களின் மூலமோ கடன் பெற்று கட்டுகின்றனர். அதற்கான EMI தவணைத் தொகையை நீண்ட காலத்திற்குச் செலுத்த வேண்டிய இக்காட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்கின்றனர்.

இத்தகைய நீண்ட கால வீட்டுக் கடன்களின் மீதான வட்டி விகிதமும் காலப்போக்கில் அதிகரித்து வருவதால், மக்கள் EMI தொகையைக் குறைப்பது மற்றும் கடன் செலுத்தும் காலத்தை நீட்டிப்பது போன்ற குறுகிய கால நிவாரணத்தையே நாடுகின்றனர். இந்நிலையில் நாட்டின் பணவீக்கம் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 6 சதவீதத்தைத் தாண்டி உயர்ந்து கொண்டிருக்கிறது. இது வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரிப்பதைக் குறிக்கிறது.

நீண்ட கால தவணை முறை: பொதுவாக நமது நாடுகளில் வழங்கப்படும் வீட்டுக் கடன் முறையானது 15 முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட கால வட்டி தவணையைக் கொண்டுள்ளது. இந்த தவணை முறையில் ஆண்டு முழுவதும் வட்டி விகிதங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். வீட்டுக் கடனுக்கான தவணை செலுத்தும் அதே காலகட்டத்தில் புதிய கடன்களை வாங்குபவர்களுக்கு EMIகள் (சமமான மாதாந்திர தவணைகள்) அதிக சுமையாக மாறும்.

வீட்டுக்கடன் பெறும் போது கடைபிடிக்க வேண்டியவை:வீட்டுக்கடன் பெறுபவர்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், கடன் பெறுபவர்களின் மாதாந்திர வருமானம் அதிகரிக்கும் போது கடனின் கால அளவைக் குறைக்க EMI தொகையை அதிகரிக்க வேண்டும். ஆண்டுதோறும் தவணை தொகை குறைந்தபட்சம் 5 சதவிகிதம் அதிகரிக்கப்பட வேண்டும். இதனால் கடனை செலுத்தும் காலத்திற்கு முன்பே செலுத்தி முடிக்க முடியும். இது அதிகரிக்கும் வட்டி சுமையைக் குறைக்க உதவும். மேலும் போனஸ் மற்றும் பிற கூடுதல் வருமானங்கள் வரும்போது வீட்டுக் கடன்களை விரைவாகச் செலுத்துவதற்காகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தற்போதைய நிலவரப்படி அனைத்து வங்கிகளின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் 8 முதல் 9 சதவீதம் வரை உள்ளன. அதே சமயம் டெபாசிட்கள் அத்தகைய விகிதங்களை வழங்கவில்லை. எனவே, குறைந்த வட்டி தரும் வைப்புத் தொகையைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக, நீண்ட காலக் கடனைத் தள்ளுபடி செய்ய அந்தத் தொகையைப் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக, ஒருவரின் வீட்டுக் கடன் வட்டி 8.55 சதவிகிதம் மற்றும் வங்கிகளில் வைப்புத் தொகை வெறும் 7 சதவிகிதமாக இருக்கும் பட்சத்தில், அவரின் வருமானம் 20 சதவீத வரி வரம்பிற்குள் குறைந்தால், டெபாசிட்டின் வருடாந்திர உயர்வு விகிதம் 5.6 சதவீதமாக மட்டுமே இருக்கும். எனவே முன்னதாக வீட்டுக் கடனை அடைக்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் குறைந்தது நான்கு தவணைகளைக் கூடுதலாகச் செலுத்த வேண்டும். அசல் தொகையில் 5 முதல் 10 சதவீதம் வரை செலுத்துவதும் பயனளிக்கும்.

கடனை மாற்றும் போது கவனிக்க வேண்டியவை: குறைந்த வட்டிக்கு ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்குக் கடனை மாற்றும்போது கவனமாக இருக்க வேண்டும். வட்டி வித்தியாசம் 0.5 சதவீதமாகவோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். மேலும் கடன் வழங்கலுக்காக வசூலிக்கப்படும் கட்டணத்தைக் குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும். கடன் விகிதம் மற்றும் வருமானம் அதிகரித்தால் வட்டியைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வங்கியுடன் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்.

இதையும் படிக்க:டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் சரிவு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.