புதுச்சேரியில் இன்று (பிப்.22) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்தில், முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், ஷாஜகான், வைத்திலிங்கம் எம்பி, துணை சபாநாயகர் பாலன், அரசு கொறடா அனந்தராமன், திமுக எம்எல்ஏக்கள் சிவா, கீதா ஆனந்தன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜெயமூர்த்தி, விஜயவேணி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களிடம் கூறிய முதலமைச்சர் நாராயணசாமி, "பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார். இதில், கூட்டணிக் கட்சிகள் எந்த நிலை எடுக்கவேண்டும் என ஆலோசித்தோம், கருத்துகளை கேட்டறிந்தோம், இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
சட்டப்பேரவை கூடும்போது எந்த நிலை எடுப்பது என காலை சட்டப்பேரவை செல்வதற்கு முன்பு முடிவு செய்வோம்" என்றார்.
இதையும் படிங்க: Operation Lotus: காங்கிரஸை கண்டுகொள்ளாத திமுக - பாஜக கனவு நனவாகுமா?