ETV Bharat / bharat

ஹிமாச்சலில் மேக வெடிப்பு காரணமாக கனமழை - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு! - மேக வெடிப்பில் 7 பேர் பலி

Himachal cloudburst: ஹிமாச்சலபிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக பெய்த கனமழையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

Himachal
ஹிமாச்சலில் மேக வெடிப்பு
author img

By

Published : Aug 14, 2023, 12:59 PM IST

ஹிமாச்சலபிரதேசம்: ஹிமாச்சலபிரதேசத்தில் நேற்று(ஆகஸ்ட் 13) முதல் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீர் சுழ்ந்துள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதனிடையே சோலன் மாவட்டத்தில் ஜடோன் என்ற கிராமத்தில் நேற்று இரவு மேக வெடிப்பு காரணமாக பெருமழை கொட்டியது. திடீரென கொட்டிய கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. குறிப்பாக இரண்டு வீடுகள் மற்றும் ஒரு கால்நடைத் தொழுவம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. நேற்று நிலவரப்படி இந்த பெருமழையில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பேரிடர் மீட்புப் படையினர் ஜடோன் கிராமத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், இன்று(ஆகஸ்ட் 14) காலையில் மாயமான மேலும் இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டதாக பேரிடர் மீட்புப் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால், பெருமழையில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்து உள்ளது. இவர்களில், ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியாகி உள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேகவெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு ஹிமாச்சலபிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "சோலன் மாவட்டத்தில் ஜடோன் கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் உங்களின் துக்கத்தில் நாங்கள் பங்கு கொள்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தொடர் மழை காரணமாக ஹிமாச்சலபிரதேசத்தில் இன்று பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹிமாச்சலப்பிரதேச பல்கலைக்கழகத்தில் முதுகலை மாணவர்களுக்கு இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

இதனிடையே ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: 70 அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளியை மீட்க போராட்டம்... டெல்லி - கத்ரா விரைவுச் சாலை பணியில் விபரீதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.