ETV Bharat / bharat

டெல்லியில் அசாதுதீன் ஓவைசியின் வீடு மீது மர்மநபர்கள் தாக்குதல் - போலீசார் வழக்குப்பதிவு! - பாரதிய ஜனதா கட்சி

தலைநகர் டெல்லியில், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM)கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசியின் வீடு, மர்ம நபர்களால் தாக்கப்பட்டு உள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் அசாதுதீன் ஓவைசியின் வீடு மீது மர்மநபர்கள் தாக்குதல் - போலீசார் வழக்குப்பதிவு!

author img

By

Published : Aug 14, 2023, 6:43 PM IST

டெல்லி: ஹைதராபாத் எம்.பி.,யும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM)கட்சி தலைவருமான அசாதுதீன் ஓவைசியின் அதிகாரப்பூர்வ வீடு, டெல்லி அசோகா சாலை பகுதியில் அமைந்து உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 13ஆம் தேதி) மாலை வேளையில், மர்ம நபர்கள், ஓவைசியின் வீடு மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில், அவரது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் சேதம் அடைந்து உள்ளன. இதுதொடர்பாக, டெல்லி போலீசாரிடம், ஓவைசி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக, டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி கூறியதாவது, “ஆகஸ்ட் 13ஆம் தேதி, அசாதுதீன் ஓவைசியின் வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக, எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, நாங்கள் ஒரு குழுவாக, சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டோம். அங்கு வீட்டின் ஜன்னலில் இருந்த கண்ணாடிகள் உடைந்த நிலையில் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

ஜன்னலின் கண்ணாடிகள் அப்போது உடைந்ததா அல்லது முன்னரே உடைந்து இருந்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றோம். இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஓவைசியின் வீடு அமைந்து உள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதாக”, அவர் குறிப்பிட்டு உள்ளார்.

தனது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அசாதுதீன் ஓவைசி கூறியதாவது, “இஸ்லாமியர்களின் வீடுகளை புல்டோசர்களை கொண்டு இடிக்கும் பணிகள் ஒருபக்கம் நடந்து கொண்டு இருக்க, மறுபுறம், எம்.பி.,யின் வீடு மீது கற்களைக் கொண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டு உள்ளது.

நான்கு முறை எம்.பி.ஆக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள என் வீடு மீது, இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருவது தொடர்கதையாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள், நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல. இதுபோன்று, பாரதிய ஜனதா கட்சி தலைவரின் வீட்டில் நடந்து இருந்தால், இதுபோன்று தான் நடவடிக்கைகள் இருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. எனது வீட்டின் மீது இதுபோன்ற தாக்குதல் நடைபெற்று இருப்பது, இது ஐந்தாவது முறை ஆகும்.

கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி, தனது வீட்டின் மீது தாக்குதல் நடைபெற்று இருந்த நிலையில், 2014ஆம் ஆண்டு முதல், தனது வீட்டின் மீது 5 முறை தாக்குதல் நடைபெற்று இருப்பதாக” ஓவைசி தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: வருமான வரி விவகாரத்தில் திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிரான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.