ETV Bharat / bharat

விரைவில் சமூக வலைதள மூத்த நிர்வாகிகள் - ஐடி அலுவலர்கள் சந்திப்பு

author img

By

Published : Aug 2, 2021, 10:20 AM IST

ஹைதராபாத்: பேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற சமூக வலைதளங்களின் மூத்த நிர்வாகிகள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அலுவலர்களை சந்திக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

FB, Twitter
FB, Twitter

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி முடிவடைந்தவுடன், பேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற சமூக வலைதளங்களின் மூத்த நிர்வாகிகள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MEITY)அலுவலர்களை சந்திக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தச் சந்திப்பில் புதிய ஐடி விதிகள் குறித்தும், டிஜிட்டல் மீடியா நெறிமுறைக் குறியீடு குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் புதிய ஐடி விதிகள் தொடர்பாக சமீபகாலமாக தொழில்நுட்ப நிறுவனங்களும், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்திற்குப் பிறகு அரசும் பதட்டமான நிலைப்பாட்டில் உள்ளதால் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அமைச்சரவை மாற்றப்பட்டதன் பிறகு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக அஷ்வினி வைஷ்ணவ் பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியா திரும்பியதும் பிரதமருடன் ஐஸ்கிரீம் சாப்பிடவுள்ள பி.வி. சிந்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.