புனே: மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் பெற்ற தந்தையே தனது மைனர் மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒடிஷாவை பூர்வீகமாகக் கொண்ட அந்த குடும்பத்தினர், புனேவுக்கு குடியேறியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது மைனர் மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இதற்கு சிறுமியின் தாயாரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது.
மேலும் சிறுமியின் தாயாருடைய நண்பர் ஒருவரும் சிறுமியிடம் ஆபாசமாக பேசி அத்துமீறியுள்ளார். சுமார் 4 ஆண்டுகளாக தந்தை தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. சிறுமிக்கு தற்போது 20 வயது.
பெற்றோரின் நடவடிக்கைகளால் சோர்ந்து போன சிறுமி அண்மையில் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தந்தை(46), தாய், தாயின் நண்பர் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வட மாநில இளைஞரை தாக்கி டிவிகள், ரொக்கப் பணம் பறிப்பு - காவலர் உள்பட இருவர் கைது!