ரேவாரி: ஹரியானா மாநிலம், ரேவாரி மாவட்டத்தில், 3 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். தந்தையின் இந்தச் செயலுக்கு தாயும் உடந்தையாக இருந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
12ஆம் வகுப்பு படிக்கும் பெண் தன்னுடைய தேர்விற்கு செல்வதற்குப் பதிலாக காவல்நிலையம் சென்று தந்தை குறித்து புகார் அளித்தார். அவரது புகாரில், தந்தை மூன்று ஆண்டுகளாக தன்னை பாலியல் வன்புணர்வு செய்து வருவதாகவும், யாரிடமாவது சொன்னால் தனது கைகளையும் கால்களையும் வெட்டிக் கொன்று விடுவதாகவும் மிரட்டுகிறார். தாயும் எல்லாம் தெரிந்து தந்தைக்கு ஆதரவளித்தார் என போலீசில் தெரிவித்தார். இந்த சம்பவத்தை அறிந்ததும் போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
18 வயதான மைனர் மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை அளித்த இந்த விஷயத்தின் தீவிரத்தைக் கண்ட போலீசாரும் முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். மாணவியின் பெற்றோர் இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் கை, கால்களை வெட்டி கொன்றுவிடுவேன் என்று மிரட்டியதால் இதுகுறித்து இதுவரை யாரிடமும் தெரிவிக்காமல் அச்சிறுமி இருந்துள்ளார்.
தந்தையின் இந்த செயல் குறித்து தாய் அறிந்திருந்தும் அவர் தனது மகளுக்கு நடக்கும் கொடுமை குறித்து குரல் எழுப்பவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் பேரில், போலீசார் பெற்றோர் மீது 120பி, 344, 376 (2) 506 மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு மறுத்த காதலியை 15 முறை கத்தியால் குத்திய காதலன்