தெலங்கானா மாநிலம் வனபார்தி மாவட்டத்தில் உள்ள பதாபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் - சுனிதா தம்பதிக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். அதில் இளைய மகளான கீதா(15) பெப்பெரூ டவுனிலுள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே கிராமத்தில் வசிக்கும் ஓர் இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையறிந்த ராஜசேகர் பலமுறை மகள் கீதாவிடம் அந்த இளைஞரிடம் பழகுவதை தவிர்க்குமாறு கண்டித்துவந்துள்ளார். ஆனால், கீதா அந்த இளைஞருடன் பழகுவதை தவிர்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று (அக்.25) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜசேகருக்கும் கீதாவுக்கும் அந்த இளைஞர் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த ராஜசேகர் வீட்டிலிருந்த கோடாரியால் கீதாவை தாக்கினார். அதனால் கழுத்தில் பயங்கர காயமடைந்த கீதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின் ராஜசேகர் காவல்துறையிடம் சரணடைந்தார்.
இதையும் படிங்க: மேற்கு வங்கத்தில் தண்டவாளம் அருகே வெடித்த குண்டு... சிறுவன் உயிரிழப்பு...