கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி தொடங்கி தேசிய தலைநகர் டெல்லியின் பல எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்தப் போராட்டங்களின்போது உயிரிழந்துள்ளனர். இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், தங்கள் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர்.
![ராகுல் காந்தி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12068869_490_12068869_1623219576062.png)
![ராகுல் காந்தி ட்வீட்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11:56:13:1623219973_1b0516cc8ad135a84df53e443072d848_0906a_1623219855_602.jpg)
இந்நிலையில், #500DeathsAtFarmersProtest என்ற ஹேஷ்டேக்குடன், விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதில், "தங்கள் பண்ணைகளையும் நாட்டையும் பாதுகாக்க, விவசாயிகள் மெதுவாக செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பயப்படவில்லை, அவர்கள் தங்கள் நிலைப்பாட்டிற்கு உண்மையாக இருக்கிறார்கள்," என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மலையாளம் மொழி பேசக்கூடாது - மன்னிப்பு கோரிய மருத்துவமனை நிர்வாகம்!