டெல்லி: பஞ்சாப் விவசாயிகளால் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதால், சில ரயில்களை ரத்து செய்தும், வழித்தடத்தை மாற்றிவிட்டும் வடக்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வண்டி எண் - 09613 எனக்குறிப்பிடப்படும் அஜ்மீர் - அமிர்தசரஸ் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இன்றும் (டிச.02), வண்டி எண் 09612 எனக்குறிப்பிடப்படும் அமிர்தசரஸ் - அஜ்மீர் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நாளையும் ரத்து(டிச.03) செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் வண்டி எண் 05211 எனக்குறிப்பிடப்படும் திப்ருகர் - அமிர்தசரஸ் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலும், வண்டி எண் 05212 எனக்குறிப்பிடப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலும் நாளை(டிச.03) ரத்து செய்யப்பட்டுள்ளன.
04998/04997 என எண்கள் கொண்ட பாடிண்டா - வாரணாசி வழித்தடத்தில் செல்லும் பாடிண்டா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.
02715 நந்தட்- அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டு, டெல்லியில் நிறுத்தப்படுகிறது. 02925 எனும் எண் கொண்ட பாந்த்ரா டெர்மினஸ் - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் இன்று(டிச.02) ரத்து செய்யப்பட்டு, சண்டிகரில் நிலைநிறுத்தம் செய்யப்படுகிறது.
04650/74 எனும் எண் கொண்ட அமிர்தசரஸ் - ஜெய்நகர் எக்ஸ்பிரஸ் இன்று வழித்தடத்தை மாற்றிவிடப்பட்டு, அமிர்தசரஸ் - டார்ன்டரன் - பியாஸ் வழித்தடத்தில் செல்கிறது.
08215 எனும் எண் கொண்ட துர்க் - ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் இன்று(டிச.02) வழித்தடம் மாற்றப்பட்டு, லூதியானா கன்ட்- பதன்கோட் ராணுவ முகாம் பகுதிக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.
08216 எனும் எண் கொண்ட ஜம்மு தாவி - துர்க் எக்ஸ்பிரஸ் வரும் டிசம்பர் 4ஆம் தேதி, வழித்தடம் மாற்றிவிடப்பட்டு, பதன்கோட் கன்ட் - ஜலந்தர் கன்ட் - லூதியானா வழித்தடத்தில் மாற்றிவிடப்படுகிறது.
இதையும் படிங்க: 3:45 மணி நேர பேச்சுவார்த்தை... தேநீரைகூட அருந்தாத விவசாயிகள்: நடந்தது என்ன?