ETV Bharat / bharat

Wrestlers Protest: அரசுக்கு 5 நாள் கெடு.. உ.பி.யில் விவசாய சங்கங்கள் மகா பஞ்சாயத்து போராட்டம்! - Naresh Tikait

பாலியல் புகார் விவகாரத்தில் மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு ஆதரவாக உத்தரபிரதேசத்தில் மகா பஞ்சாயத்து போராட்டம் நடத்த உள்ளதாக விவசாய சங்கத் தலைவர் நரேஷ் டிகாயிட் தெரிவித்து உள்ளார்.

Wrestlers Protest
Wrestlers Protest
author img

By

Published : May 31, 2023, 3:07 PM IST

Updated : May 31, 2023, 5:23 PM IST

முசாபர்நகர் : மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக வியழக்கிழமை உத்தரபிரதேசத்தில் நடைபெறும் மகா பஞ்சாயத்து போராட்டத்தில் அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாய சங்கத்தினர் உள்ளிடோர் கலந்து கொள்ள உள்ளதாக பாரதிய கிஷான் சங்கத்தின் தலைவர் நரேஷ் டிகாயிட் தெரிவித்து உள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சிங் மீது கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி முதல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடந்த 28ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்ட நிலையில், தங்களுடைய புகார் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட முயன்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது டெல்லி போலீசார் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், அவர்களை குண்டுக் கட்டாக தூக்கிச் சென்றனர். மேலும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது டெல்லி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பாலியல் புகார் விவகாரத்தில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யாவிட்டால், நாட்டுக்காக வென்ற பதக்கங்களை கங்கை நதியில் தூக்கி வீச உள்ளதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அறிவித்தார்.

மேலும், இந்தியா கேட் பகுதியில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா தெரிவித்தார். இந்தியா கேட் பகுதியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். தேசிய நினைவுச் சின்னம் முன் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்றும் அப்படி போராட்டம் நடத்தினால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாருக்கு சென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகள் கங்கை நதியில் பதக்கங்களை வீச இருந்த நிலையில், அவர்களை விவசாயிகள் தலைவர் மற்றும் பாரதிய கிஸான் சங்கத்தின் தேசியத் தலைவருமான நரேஷ் டிகாயிட் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

கங்கை நதியில் வீச இருந்த பதக்கங்களை வீரர் வீராங்கனைகளிடம் இருந்து பெற்றுக் கொண்ட அவர், 5 நாட்கள் அவகாசம் தருமாறும் அதற்குள் பிரிஜ் பூஷன் சிங் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றும் கூறினார். இதையடுத்து வீரர், வீராங்கனைகளின் போராட்டக் களத்தை விட்டு வெளியேறினர்.

இந்நிலையில், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்யக் கோரி நாளை (வியாழக்கிழமை) மகா பஞ்சாயத்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த மகா பஞ்சாயத்து போராட்டத்தில் அரியானா, உத்தர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்வேறு விவசாய சங்கங்கள், குழுக்கள் கலந்து கொள்ள உள்ளதாக அவர் கூறினார். பிரிஜ் பூஷ்ன் சிங் மீது ஐந்து நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகள், விவசாய சங்கத்தினர் கெடு விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Rahul Gandhi: "பிரதமர் மோடி கடவுளுக்கே வகுப்பு எடுப்பார்" - அமெரிக்காவில் ராகுல் காந்தி விமர்சனம்!

Last Updated : May 31, 2023, 5:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.