தொட்டபல்லாப்பூர்: கனகேனஹள்ளி காலனி பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தில் நான்கு பேர் குள்ளமாக உள்ளனர். அவர்கள் கேலி கிண்டல் செய்யப்பட்டதால் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்கு செல்ல முடிவு செய்தனர். ஆனால் அவர்களுக்கு யாரும் வேலை கொடுக்க வில்லை.
முத்தராயப்பா மற்றும் ஹனுமக்கா தம்பதிக்கு ஏழு குழந்தைகள் உள்ளனர். அவர்களில் நான்கு பேர் குள்ளமாக பிறந்துள்ளனர். தம்பதியும் வயதானவர்களாக இருப்பதால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இதனால் குடும்பத்தின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த குடும்பத்தில் பியூசி படித்துள்ள பூஜாம்மா (36) ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார். அவருக்கு விபத்து ஏற்பட்டு தற்போது குணமடைந்துள்ள நிலையில், வேலை தர மறுப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், பூஜாம்மா குள்ளமாக இருப்பதாலும் அவருக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். தற்போது, அவர் கிராமத்தில் கூலி வேலை செய்து வருகிறார்.
இதையும் படிங்க : திருமண விழாவில் சாதி அடிப்படையில் உணவு பரிமாறிய அவலம் - போலீசார் வழக்குப்பதிவு!