டார்ஜலிங் : மேற்கு வங்கத்தில் போலி ராணுவ அள்சேர்ப்பு முகாம் நடத்தியவர்களை போலீசார் மற்றும் ராணுவத்தினர் கைது செய்தனர்.
மேற்கு வங்கம் மாநிலம் சிலிகுரியில் போலி ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடப்பதாக இந்திய ராணுவத்தின் புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து இந்திய ராணுவத்தின் திரிசக்தி படை மற்றும் சிலிகுரி மாவட்ட காவல் ஆணையரக தலைமையிலான போலீசார் கூட்டாக இணைந்து அதிரடி வேட்டை நடத்தினர்.
இதில் இந்திய ராணுவத்தில் லெப்டினட் கர்னல் எனக் கூறி ஒருவர் ஆள்மாறட்டத்தில் ஈடுபட்டதாகவும், போலி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமுக்கு மூளையாக செயல்பட்டதாகவும் ஒருவரை கைது செய்ததாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்திய ராணுவத்தில் சேர விருப்பமுள்ள இளைஞர்களை மூளைச் சலவை செய்து அவர்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நபர் ஈடுபட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரின் பெயர் தல்சந்த் வர்மா என்றும் இந்த போலி ஆள்சேர்ப்பு முகாம் குறித்த ரகசிய தகவலை அடுத்து பெரிய அளவிலான மோசடி தடுக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். கைது செய்யப்பட்ட தல்சந்த் வர்மா சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் உள்ள எம்ஜி மார்க் சாலையில் வசிப்பவர் என்றும் திங்கள்கிழமை இரவு சிலிகுரியை ஒட்டிய சலுகரா பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் இருந்து ராணுவம் மற்றும் சிலிகுரி போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய ராணுவத்தில் லெப்டினட் கர்னலாக பணியாற்றுவதாக கூறி இளைஞர்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் தல்சந்த் வர்மா ஈடுபட்டதாகவும் அவரிடமிருந்து செல்போன், உள்ளிட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாகவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : "மார்கதரசி சிட்பண்ட் ஆர்பிஐ விதிகள் படியே இயங்குகிறது" - ஆந்திர போலீசாரால் சந்தாதாரர்களுக்கு தொல்லை என புகார்!