வியட்நாம் பிரதமர் தலைமையில் நடைபெறும் 15ஆவது கிழக்காசிய உச்சி மாநாட்டில் அமைச்சர் ஜெய்சங்கர் காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்கிறார்.
இந்த மாநாட்டில் ஆசியா-பசிபிக் எல்லையில் பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது. தற்போது நிலவிவரும் கரோனா நெருக்கடியிலிருந்து மீள்வது குறித்தும் புவிசார் அரசியல் குறித்தும் தலைவர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர்.