வியட்நாம் பிரதமர் நுயேன் ஜுவான் ஃபுக் தலைமையில் கிழக்காசிய நாடுகளின் 15ஆவது உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டமைப்பின் பதினெட்டு உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
வியூக ரீதியான விவகாரத்தில் தலைவர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டதாக கிழக்காசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச சட்டத்தை நிலைநாட்டுவது, மற்ற நாடுகளின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் ஊக்குவிப்பது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார்.
கரோனாவை இந்தியா எப்படி எதிர்கொண்டது, சர்வதேச நாடுகளுக்கு இந்தியா எப்படி உதவியது குறித்து ஜெய்சங்கர் இதில் விளக்கினார். நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி சென்றடைவதில் பிரதமர் மோடி உறுதியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.