ETV Bharat / bharat

இந்தியா - அமெரிக்கா இணைந்து தயாரிக்க உள்ள ஐசிவி போர் வாகனங்கள் பற்றி தெரியுமா? - Latest news in tamil

India and US plan to coproduce ICV: இந்தியா- அமெரிக்கா இரு நாடுகளும் தரைப்படை போர் வாகனங்களை (ICV) இணைந்து உருவாக்குவதற்கும் மற்றும் இணைந்து தயாரிப்பதற்கும் ஆலோசனை செய்து வருவதாக இந்தியாவின் பாதுகாப்புத்துறை செயலாளர் கிரிதர் அரமனே தெரிவித்துள்ளார்.

explainer-what-is-the-infantry-combat-vehicle-that-india-and-us-plan-to-co-produce
இந்தியா - அமெரிக்கா இணைந்து தயாரிக்க உள்ள ஐசிவி போர் வாகனங்கள் என்றால் என்ன?
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 6:07 PM IST

டெல்லி: இந்தியா - அமெரிக்கா இடையே 2 + 2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தைகள் நேற்று (நவ.10) நடைபெற்றது. இதில், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் இரண்டுத் துறை செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்தியா - அமெரிக்கா ஆகிய இருநாடுகளின் பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத் துறை உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இரண்டு நாடுகளின் அமைச்சர்கள், செயலாளர்கள் மத்தியில் 2 + 2 பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் வெளியுறவுத் துறைச் செயலர் வினய் குவாத்ரா மற்றும் பாதுகாப்புச் செயலர் கிரிதர் அரமனே இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில், பாதுகாப்புத் துறை செயலாளர் கிரதர் அரமனே கூறும் போது, "இரு நாடுகளும் ஐசிவி (தரைப்படை போர் வாகனம்) (ICV) இணைந்து உருவாக்குவதற்கும் மற்றும் இணைந்து தயாரிப்பதற்கும் ஆலோசனை நடைபெற்றதாகவும், இரு நாடுகளுக்கு இடையே ராணுவ நிறுவனத்தின் பாதுகாப்பான சாலை உருவாக்கவும் பேச்சு வார்த்தை நடைபெற்றதாகவும் மற்றும் இரு நாடுகளும் இணைந்து தேவையான ராணுவ இயந்திரங்கள் உபகரணங்கள் மற்றும் ஆயுதங்கள் உருவாக்குவதும், உற்பத்தி செய்வதற்கும் எற்பாடு செய்யப்படுகிறது.

ஐசிவி (தரைப்படை போர் வாகனம்) ஆரம்பக் கட்ட பணிகளுக்கான முன்னெடுப்பு அமெரிக்கா தொடங்கியுள்ளதாகவும் மேலும், இந்த பேச்சு வார்த்தை விவாதத்தில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் ஆர்வம் குறித்துத் தெரிவித்துள்ளதாகவும். இரு நாடுகளின் தொழில்துறை மற்றும் இராணுவ குழுக்கள் இணைந்து முழுமையான திட்டத்தைக் கொண்டு வரும் அதற்கு சில காலங்கள் தேவைப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கா ஐசிவி (ICV) தரைப்படை போர் வாகனம் தயாரிப்பதற்கான சலுகையை இந்தியாவிற்கு வழங்கியதாகவும், மேலும் ஐசிவி திட்டத்தின் படி ஜெனரல் டைனமிக் லேண்டு அமைப்பின் மூலம் தயாரிக்கப்பட்ட 30 மிமீ பீரங்கி மற்றும் 105 மிமீ மொபைல் துப்பாக்கி கொண்ட ஸ்ட்ரைக்கர் வலிமையான சிறப்புகளைக் கொண்டதாகும். ஸ்ட்ரைக்கர் 8 சக்கரங்கள் கொண்ட கவச போர் வாகனம் ஆகும். மேலும் இந்த வாகனம் இரண்டு அமெரிக்கா வீரர்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாகனங்கள் இரண்டாம் உலகப் போர் மற்றும் வியட்நாம் போர்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக அமெரிக்காவிற்குச் சென்ற போது ஐசிவி (தரைப்படை போர் வாகனம்) குறித்த சலுகைகள் அமெரிக்காவால் வழங்கப்பட்டது எனவும் அதன் பின் நேற்று (நவ.10) டெல்லியில் நடைபெற்ற இரு நாட்டின் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் சந்திப்பில் இது குறித்து விவாதிக்கப் பட்டுள்ளதாகவும் மற்றும் பாதுகாப்புத்துறை, தொழில்துறை ஆகியவற்றை ஒன்றிணைந்து பாதுகாப்பு அமைப்பை உருவாக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: புத்துயிர் பெறுகிறதா விடுதலை புலிகள் இயக்கம்? இலங்கைக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.