ETV Bharat / bharat

கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது யார்? - திமுகவை குற்றம் சாட்டும் பிரதமர்!

கச்சத்தீவை தாரைவார்த்தது யார்? இது நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி எழுப்பிய கேள்வி. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கச்சத்தீவு மீட்பு தொடர்பாக பிரதமருக்கு எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு பேசியுள்ளார். சரி, கச்சத்தீவு ஒப்பந்தம் எப்படி கையெழுத்தானது? அது இலங்கையின் வசம் சென்றது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கச்சத்தீவு இலங்கை வசம் போனது ஏன்? - திமுகவை குற்றம் சாட்டும் பிரதமர்!

author img

By

Published : Aug 12, 2023, 7:00 PM IST

ஐதராபாத்: வரலாற்று ஆசிரியர்களின் கருத்துப்படி கச்சத்தீவு எப்போதுமே இலங்கையின் ஒரு பகுதியாக இல்லை. அப்படி இருக்கையில் 1974 ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை இடையிலான ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. 1976 ம் ஆண்டு மற்றொரு ஒப்பந்தத்தின் படி இந்தியாவில் உள்ள மீனவர்கள் கச்சத்தீவை பயன்படுத்திக் கொள்வதற்கான உரிமை மறுக்கப்பட்டது.

முதல் ஒப்பந்தம் கையெழுத்தான போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்தது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு தான். அப்போது, 1974வது ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி தமிழ்நாட்டின் கருத்தை கேட்டுப்பெறாமல், நாடாளுமன்றத்திலும் முன்னறிவிப்பு தராமல் கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் இந்திரா காந்தி கையெழுத்திட்டிருந்தார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஆதம் பாலம் முதல், பாக் ஜலசந்தி வரையிலான கடல் பரப்பில் இந்தியா மற்றும் இலங்கை இடையே கற்பனையான எல்லைக்கோடு வரையப்பட்டது. இந்த கோட்டினால் கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாக வரையறுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை திரும்பப் பெறக் கோரி அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி கடிதம் எழுதினார்.

தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்தியா இலங்கை இடையிலான கச்சத்தீவு ஒப்பந்த நகல் நாடாளுமன்றத்தில் தாக்கலான போது, தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது ஒருபுறமிருக்க 1976ம் ஆண்டு மற்றொரு உடன்படிக்கை இலங்கையுடன் கையெழுத்தான போது, கச்சத்தீவு மீது தமிழ்நாடு மீனவர்களுக்கு இருந்த உரிமையும் மறுக்கப்பட்டது.

இந்த சமயத்தில் ஏற்கெனவே தமிழ்நாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டிருந்தது. ஆனாலும் 1980ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக காங்கிரசுக்கு ஆதரவு அளித்தது. அப்போது கருணாநிதியின் முழக்கமான "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக" என்ற வாக்கியம் மிகவும் புகழ் பெற்றது. கச்சத்தீவு தாரைவார்ப்பின் போது திமுக எதிர்ப்பு தெரிவித்தாலும், இதற்கு பிந்ததைய நிலைப்பாடு திமுக மீதும், கருணாநிதி மீதும் விமர்சனத்திற்கு காரணமாகியது.

கச்சத்தீவின் வரலாற்றை சற்று பின்நோக்கி காணலாம்: வங்காள விரிகுடாவின் பாக்கு நீரிணையில்(Palk strait), இந்தியா இலங்கை இடையே அமைந்துள்ளது கச்சத்தீவு. இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து கடலினுள் 25 மைல் தொலைவில் கச்சத்தீவு உள்ளது. இப்பகுதியில் மக்கள் வசித்ததற்கான சான்று எந்த காலத்திலும் இல்லை. அந்த தீவு 17ம் நூற்றாண்டில் ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களுக்கு சொந்தமாக இருந்தது. 1822ம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனிக்கு கச்சத்தீவு வழங்கப்பட்டது.

பின்னர், இங்கிலாந்து மகாராணியின் ஆட்சியின் கீழ் இந்தியா வந்தபோது, ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கே சொந்தம் என அறிவிக்கப்பட்டது. 1921ம் ஆண்டு தான் கச்சத்தீவு வேண்டும் என இலங்கை முதன்முறையாக கோரிக்கை விடுத்தது. அது முதல் அவ்வப்போது பிரச்சனைகள் , பேச்சுவார்த்தைகள் என நடைபெற்று வந்தாலும் மீனவர்களுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.

1971ம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தான் போருக்குப் பின் நிலைமை தலைகீழாக மாறியது . இந்த போரில் இந்தியா வெற்றி பெற்று பங்களாதேஷ் என்ற தனிநாடு உருவாகியிருந்தது. பாகிஸ்தானும், சீனாவும் இந்தியாவின் அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்ட முனைந்தன. பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இலங்கை அந்த நாடுகளின் வலையில் இருந்தது.

இந்த சூழலில் சீனா அல்லது பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டாமல் இருக்கவும், இந்தியாவுடன் இணக்கமாக நடந்து கொள்ளவும் கச்சத்தீவை தங்களுக்கு தரவேண்டும் என நிபந்தனை விதித்தது இலங்கை. இதன் பின்னரே 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் இலங்கை பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கா மற்றும் இந்திய பிரதமர் இந்திரா இடையே கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதன் தீவிரத்தை தமிழ்நாடு உணர்ந்தது இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் காலகட்டத்தில் தான். விடுதலைப் புலிகளை கண்காணிப்பதற்காக கடலில் ரோந்து வரும் கடற்படை இந்திய மீனவர்களை கச்சத்தீவினருகில் பார்த்தாலே சுட்டுத்தள்ளியது. 2009ம் ஆண்டு இலங்கை இறுதிக்கட்டப் போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட நிலையில் போர் முடிவுக்கு வந்தது. அதற்கு முன்பாகவே சுமார் 250 தமிழ்நாடு மீனவர்கள் கொல்லப்பட்டனர்.

தற்போதும் தமிழ்நாடு மீனவர்களின் கைது தொடர் நடவடிக்கையாகவே உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஜூலை 20ம் தேதி எழுதப்பட்ட கடிதத்தில், 2020ம் ஆண்டு முதல் தற்போது வரையிலும் 619 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதத்தை சுட்டிக்காட்டியே நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.

இதையும் படிங்க: "பாரதிய நியாய சன்ஹிதா.. போலீஸ் வன்முறையை ஆதரிக்கிறது" - கபில் சிபல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.