ஐதராபாத்: கடந்த ஜூலை 26ம் தேதி நண்பகலில் மக்களவை கூடியபோது நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த அறிவிப்பு சபாநாயகரிடமிருந்து வந்தது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத்தலைவரான எம்.பி. கவுரவ் கோகாய் இந்த தீர்மானத்தை வழங்கியிருந்தார். இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்துவதற்காக அவையில் அனுமதி கோருமாறு கவுரவ் கோகாயிடம் சபாநாயகர் கேட்டுக் கொண்டார்.
தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது எப்படி? அவையில் கோகாய் தீர்மானத்தை முன்வைத்ததும், இதனை ஆதரிக்கும் உறுப்பினர்கள் எழுந்து நிற்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக்கொண்டார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியான I.N.D.I.A.வைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத்தலைவர் சோனியா காந்தி , தேசிய மாநாட்டுக்கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, திமுக எம்.பி. டி.ஆர் பாலு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் தீர்மானத்திற்கு ஆதரவாக எழுந்து நின்றனர்.
இதன் பின்னர் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டார் ஓம் பிர்லா. ஆகஸ்ட் 8 மற்றும் 9ம் தேதிகளில் விவாதம் நடைபெறும் எனவும், பிரதமர் மோடி ஆகஸ்ட் 10ம் தேதி பதிலளிப்பார் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முக்கியத்துவம்: நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு கொண்ட கட்சி மட்டுமே ஆட்சியில் நீடிக்க முடியும். எனவே அமைச்சர்கள் குழு மக்களவைக்கு, கூட்டுப் பொறுப்பு உடையவர்கள். கூட்டுப் பொறுப்பு என்பது இரண்டு அடிப்படை விதிகளை அமலாக்குவதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
முதல் விதி பிரதமரின் பரிந்துரை அல்லாத எந்த நபரும் அமைச்சரவையில் இடம் பெற முடியாது. இரண்டாவது ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்யுமாறு பிரதமர் கோரினால், அவர் அமைச்சரவையில் நீடிக்க முடியாது. கூட்டுப் பொறுப்பு என்பது ஒரு கொள்கை முடிவு விவாத கட்டத்தில் இருக்கும்போது ஒரு அமைச்சர் சுதந்திரமாக அதன் மீது கருத்து தெரிவிக்கலாம். ஆனால் முடிவு எட்டப்பட்ட பின்னர் ஒவ்வொரு அமைச்சரும் விருப்பு வெறுப்பின்றி அதற்கு உடன்பட்டவராக இருக்க வேண்டும்.
அரசாங்கம் சபையின் நம்பிக்கையை இழந்தால்: இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 75(3) இன் படி மக்களவையின் கூட்டுப்பொறுப்பை அமைச்சர்கள் குழு ஏற்க வேண்டும். அரசாங்கம் மக்களவையின் நம்பிக்கையை இழந்தால் மொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டும், அல்லது சபையை கலைக்க வேண்டும் என்பதை குறிக்கும். நம்பிக்கை இழப்பை குறிக்கும் இடத்தில் மட்டுமே ராஜினாமா அல்லது சபை கலைப்பு பின்பற்றப்படும்.
ராஜினாமா செய்வதா அல்லது சபையை கலைப்பதா என்பதில் எது முக்கியத்துவம் வாய்ந்தது என அரசாங்கம் தீர்மானிக்கும். நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பு மூலம் சபையின் கருத்தை எதிர்க்கட்சியினர் தெரிந்துகொள்ள முடியும்.
பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தீர்மானங்கள் முன்வைக்கப்படலாம்: அரசியலமைப்பு விதிகளின்படி, மக்களவையில் நடைமுறை மற்றும் வணிக நடத்தை விதிகள், அமைச்சர்கள் குழுவில் நம்பிக்கையை வெளிப்படுத்தும் தீர்மானம் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு முன்வைக்கப்படலாம். எதற்காக வெளிநடப்பு செய்யகின்றனரோ அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். மற்றொரு விதியாக வெளிநடப்பு செய்ய விரும்புபவர்கள் தீர்மானம் பற்றிய எழுத்துப்பூர்வமான அறிவிப்பை 10 மணி நேரத்துக்குள் வழங்க வேண்டும்.
நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்க உறுப்பினர்களின் ஆதரவு: தீர்மானம் சரியானது என்று சபாநாயகர் கருத்து தெரிவித்தால் அவர் அந்த தீர்மானத்தை சபையில் வாசித்து விட்டு வெளிநடப்பு செய்வதற்கு ஆதரவாக உள்ள உறுப்பினர்களை அவரவர் இடத்தில் எழுந்து நிற்குமாறு கூறுவார். அவருக்கு ஆதரவாக 50 மக்களவை உறுப்பினர்கள் இருந்தால் சபாநாயகர் வெளிநடப்புக்கு ஒத்துகொண்டதாகவும், வெளிநடப்பு கேட்கப்பட்ட நாளிலிருந்து பத்து நாட்களுக்கு மிகாமல், அந்த நாளில் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் சபாநாயகர் அறிவிக்க வேண்டும். அறிவிப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 10 நாட்களுக்குள் தேதி ஒதுக்கப்படும்.
குறிப்பிடப்பட்ட காரணங்களுடன் மட்டும் விவாதங்கள் முடிவதில்லை: தீர்மானம் மீதான விவாதம் நடைபெறும். தீர்மானத்தை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் குறைகளை முன்னிலைப் படுத்துகிறார்கள். மேலும் அவர்கள் எழுப்பும் பிரச்னைகளுக்கு பிரதமர் மற்றும் நாடாளுமன்ற குழு பதிலளிக்கும். இறுதியாக ஒரு வாக்கெடுப்பு நடைபெறும். அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அரசாங்கம் அலுவலகத்தை காலி செய்ய வேண்டும்.
விவாதத்தின் மீதான பதில்: தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசிய பிறகு, அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தீர்மானத்தை முன்வைப்பவர்களிடம் பிரதமர் பதிலளிக்க வேண்டும். பின்னர் சபாநாயகர், ஒதுக்கப்பட்ட நாளில் அல்லது நாட்களில் கடைசி நேரத்தில், விவாதம் முடிந்ததும், தீர்மானத்தின் மீது சபையின் முடிவை உறுதி செய்ய தேவையான ஒவ்வொரு கேள்வியையும் உடனடியாக முன்வைப்பார்.
எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் NDA (334) எதிர்க்கட்சியான இந்தியா (142) வை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. இதனால் எதிர்கட்சி தோல்வியை சந்திக்கும். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமரின் மௌனம் கலையும் என எதிர்க்கட்சிகளின் கூட்டணி நம்புகின்றது.
இதற்கு பிரதமர் உடன்படலாம், இல்லாமல் போகலாம். ஆனால் அதிகாரப்பூர்வமாக, சட்ட ஒழுங்கு பிரச்சனை உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் தான் வருகிறது. எனவே, விவாதத்தில் அமித்ஷா தலையிட்டு பதிலளிக்கலாம்.
சுதந்திர இந்தியாவின் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் எப்போது கொண்டுவரப்பட்டது?: நம்பிக்கையில்லா தீர்மானம் வரலாற்று ரீதியாக ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் விவாதத்தை கட்டாயப்படுத்துவதற்கான ஒரு உத்தியாக பயன்படுத்தப்படுகிறது. 1963ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் தலைமையிலான அரசிற்கு எதிராக ஆச்சார்யா ஜேபி கிருபலானியால் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நான்கு நாட்கள் 21 மணி நேரம் நீடித்தது. இதில் 40 எம்.பி.க்கள் பங்குபெற்றனர்.
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நேருவின் கருத்து: "நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது ஒரு கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு அதன் ஆட்சி இடத்தைப் பிடிப்பதை நோக்கமாகக் கொண்டது. ஆனால், அப்படியொரு எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அதனால் இது குறித்தான விவாதம் பல வழிகளிளும் சுவாரஸ்யமாகவும் லாபகரமாகவும் இருந்தது என நான் நினைக்கிறேன். இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொஞ்சம் உண்மையற்றதாக இருந்தாலும், அது குறித்தான விவாதத்தை தனிப்பட்ட முறையில் நான் வரவேற்கிறேன். மேலும், இது போன்ற காலநிலை சோதனைகளை அவ்வப்போது நடத்தினால் நல்லது என்றும் நான் நினைக்கிறேன்" என்று தெறிவித்துள்ளார்.
அரசை எதிர்த்து இதுவரை கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள்: இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது முதல் இறுதியாக கடந்த 2018ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரையில், நாடாளுமன்றத்தில் மொத்தம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கணக்கிடப்படவில்லை. இந்த 27 தீர்மானங்களில், 15 தீர்மானங்கள் இந்திரா காந்தி ஆட்சியின் போது நிறைவேற்றப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்மானங்கள் ஏதும் செயல்படுத்தப்படவில்லை. குறிப்பாக 1979 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் ஆட்சியின் போது, ஆழும் அரசை எதிர்த்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானம் குறித்து விவாதங்கள், வாக்கெடுப்புகள் என ஏதும் நடைபெறாத போதும், ஒரு ஆட்சி கலைக்கப்பட்டது என்றால் அது மொரார்ஜியின் ஆட்சியில் தான். விவாதங்கள் நிலுவையில் இருந்த போது அப்போது ஆட்சியில் இருந்த மொரார்ஜி பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடதக்கது.
NDA-வின் இரண்டாவது நம்பிக்கையில்லா தீர்மானம்: 2014ஆம் ஆண்டு பதவியேற்றத்திற்கு பிறகு NDA-வின் இரண்டாவது நம்பிக்கையில்லா தீர்மானமாக இது கருதப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டது. அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தீர்மானங்களுக்கு எதிராக 325 எம்பி-க்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், வெறும் 126 எம்பிகளின் ஆதரவோடு வெற்றியையே தழுவினார். அதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஆட்சியைத் தக்க வைத்து கொண்டது தேசிய ஜனநாயகக் கூட்டணி. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, 2024ல் தனது கட்சியின் வெற்றியை எளிதாக்க 2023 ஆம் ஆண்டு எதிர்கட்சிகள் ஒன்று திரண்டு தன் ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரலாம் என முன்கூட்டியே கணித்திருந்தார்.