ETV Bharat / bharat

21 நாடுகளுக்கு ஏஞ்சல் வரி விலக்கு; சிங்கப்பூர், மொரீசியஸ் நாடுகள் அதிர்ச்சி! - மத்திய நேரடி வரிகள் வாரியம்

இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் 21 நாடுகளுக்கு ஏஞ்சல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நேரடி முதலீடுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் சிங்கப்பூர் மற்றும் மொரீசியஸ் நாடுகளுக்கு இந்த வரி விலக்கு அளிக்கப்படவில்லை.

Explained
சிங்கப்பூர்
author img

By

Published : May 28, 2023, 10:21 PM IST

டெல்லி: இந்தியாவில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும் 21 நாடுகளுக்கு ஏஞ்சல் வரி (Angel tax)-யிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்துள்ளது. ஏஞ்சல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் 21 நாடுகளின் பட்டியலை மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது.

பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா போன்ற இந்தியாவுடன் பல்வேறு வர்த்தகங்களை மேற்கொண்டு வரும் நாடுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ஜெர்மனி, ஐஸ்லாந்து, நியூசிலாந்து, நார்வே, ஸ்பெயின், ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கும் ஏஞ்சல் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர், மொரீசியஸ் நாடுகளுக்கு வரி விலக்கு இல்லை:

ஏஞ்சல் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட 21 நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர், மொரீசியஸ் நாடுகளின் பெயர்கள் இடம்பெறவில்லை. கடந்த ஓரிரு தசாப்தங்களில் இந்தியாவின் நேரடி வெளிநாட்டு முதலீடுகளில் சிங்கப்பூர் மற்றும் மொரீசியஸ் நாடுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

புள்ளி விவரங்கள்படி, கடந்த 20 ஆண்டுகளில் சிங்கப்பூர், மொரீசியஸ், கேமன் தீவுகள் மற்றும் சிப்ரஸ் ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு 54 சதவீத நேரடி முதலீடுகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டன் மற்றும் அமெரிக்காவிலிருந்து 10 சதவீதத்திற்கும் குறைவாகவே முதலீடுகள் வந்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், ஏஞ்சல் வரியில் இருந்து சிங்கப்பூர், மொரீசியஸ் நாடுகளுக்கு மத்திய அரசு விலக்கு அளிக்கவில்லை. அதேபோல், அயர்லாந்து, நெதர்லாந்து, லக்சம்பர்க் நாடுகளுக்கும் இந்த வரி விலக்கு அளிக்கப்படவில்லை. இந்த நாடுகளும் இந்தியாவின் முக்கிய முதலீட்டு மூலமாக விளங்குகின்றன.

எந்தெந்த முதலீட்டாளர்களுக்கு வரி விலக்கு?

இந்த ஏஞ்சல் வரி விலக்கு, குறிப்பிட்ட வகை முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த 21 நாடுகளைச் சேர்ந்த அரசு வங்கிகள், சர்வதேச வர்த்தக நிறுவனங்கள், அரசின் 75 சதவீத பங்குகள் கொண்ட தொழில் நிறுவனங்கள், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டுள்ள வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்தியாவின் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி (Securities and Exchange Board of India -SEBI)-ல் முதல் வகை வெளிநாட்டு முதலீட்டாளர்களாக பதிவு செய்துள்ள நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செபியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், தொண்டு நிறுவனங்களும் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட 21 நாடுகளில் சட்டப்படி உருவாக்கப்பட்ட ஓய்வூதிய நிதிகளுக்கும் வரி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏஞ்சல் வரி என்றால் என்ன?

ஒரு புதிய நிறுவனத்தில் முதலீடு செய்யத் தயாராக இருப்பவர்கள் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் பொதுவாக, ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்வார்கள். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 56(2)-ன் படி பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாத சிறு நிறுவனங்கள் ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மூலம் முதலீட்டைப் பெறும்போது இந்த ஏஞ்சல் வரி அல்லது மூலதன வரி விதிக்கப்படும்.

இந்த வரி கடந்த 2012ஆம் ஆண்டு முதல் விதிக்கப்பட்டு வருகிறது. நிதி மோசடிகளைத் தடுக்கவும், முதலீடு செய்பவர்களை கண்காணிக்கவும் இந்த வரி கொண்டு வரப்பட்டது. ஏஞ்சல் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட பங்குகளின் விலை, நிறுவனத்தின் சந்தை மதிப்பை விட அதிகமாக இருந்தால் மட்டுமே இந்த மூலதன வரி விதிக்கப்படுகிறது. இந்த ஏஞ்சல் முதலீடு, முதலீடாக பார்க்கப்படுவதை விட வருமானமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் முதலீட்டிற்கான ஏஞ்செல் வரி விதிகள் தளர்த்தப்பட்டு, கூடுதல் சலுகைகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: RBI Governor : பணவீக்கத்தின் மீது போர்... வட்டி விகிதங்கள் குறித்து உண்மை உடைத்த ஆர்.பி.ஐ கவர்னர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.