டெல்லி : தடுப்பூசி, சுத்தமான முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவை கோவிட் மூன்றாம் அலையை சமாளிக்க உதவும் முன்னணி பொருள்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நாக்பூரை தலைமையிடமாக கொண்ட ஐஐடி, ஐஐஎம் மற்றும் ஐஐஎஸ்இஆர் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்கள், கோவிட் 3ஆம் அலையை எதிர்கொள்வது தொடர்பாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 20) செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் கூறுகையில், “மூன்றாம் அலை பரவலை கட்டுப்படுத்த தூய்மையான அதேநேரம் நல்ல வடிகட்டும் திறன் கொண்ட முகக்கவசங்கள் தேவை.
அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கோவிட் வைரஸிற்கு எதிராக போராட இது முக்கியமானது. ஏனெனில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும்போது உடலில் நோயெதிர்ப்பு சக்தி உருவாகும்.
இது வைரஸை எதிர்த்து போராட உதவும். நமக்கு சார்ஸ் கோவிட் பிரச்சினைகள் மட்டும் அல்ல. கறும்பூஞ்சை என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆகையால் நோய்த்தொற்றை தவிர்க்கும் வகையில் இந்தியர்கள் வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்கலாம்.
அரசின் கோவிட் கட்டுப்பாடு வழிமுறைகளை பரிந்துரைகளை பின்பற்றி நடக்க வேண்டும். இது வைரஸ் பரவலை தடுக்க உதவும்” என்றனர்.
இதையும் படிங்க : மூன்றாம் அலை- டெல்டா அறிகுறிகள் என்னென்ன?