ETV Bharat / bharat

ரூ.2000 விவகாரத்தில் ரிசர்வ் வங்கி சொல்வது என்ன? - மிஸ் பண்ணிறாதீங்க மக்களே!

வங்கிகளின் செயல்பாடு வசதிகளை உறுதி செய்வதற்கும், வங்கி கிளைகளின் வழக்கமான பணிகள் பாதிக்கப்படாமல் இருக்கும் பொருட்டு, 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை, வாடிக்கையாளர்களுக்கு மாற்றி தரும் பணிகளை, செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிக்க, இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.

Expalined All you need to know  about RBI Decision on Rs 2000 note
2000 ரூபாய் விவகாரத்தில் இந்திய ரிசர்வ் வங்கி சொல்வது என்ன? - மிஸ் பண்ணிறாதீங்க மக்களே!
author img

By

Published : May 20, 2023, 2:26 PM IST

டெல்லி: தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து உள்ளதால், அடுத்த 4 மாதங்களில் வங்கிகளில் டெபாசிட் செய்து கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பங்குச் சந்தைகளில் பாதகமான தாக்கங்களைத் தவிர்க்க, வெள்ளிக்கிழமை மாலை ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட இந்த முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

2016ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், பிரதமர் மோடியால், அறிமுகப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்பு திட்டம், பலனற்றது என்பதை, காங்கிரஸ் கட்சி அப்போதே அறிவித்தது. அதை தற்போது தான், பிரதமர் மோடி உணர்ந்திருப்பதாக, காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

1934 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின்படி, வங்கிகள் நோட்டுகளை வெளியிடுவதையும், நாட்டின் பண இருப்புக்களை ஒழுங்குபடுத்துவதையும், நிர்வகித்து வருகிறது. இந்தியாவின் பண ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதும், நாட்டின் நலனுக்காக, பணம், மற்றும் கடன்களை பயன்படுத்துவதே, இந்திய ரிசர்வ் வங்கியின் முக்கிய நோக்கம் ஆகும்.

இந்திய ரிசர்வ் வங்கியின் 22வது பிரிவு, ரூபாய் நோட்டுக்களை வெளியிடுவதற்கான, நாட்டின், அதிகாரமிக்க அமைப்பாக உள்ளது. ரூபாய் நோட்டுக்களின் மதிப்பை தீர்மானிக்கவும், புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதற்கும், இந்தப் பிரிவு அனுமதிக்கிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டுக்களை ஏன் திரும்பப் பெறுகிறது?

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், 2000 ரூபாய் நோட்டு, இந்திய ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டது. அது அந்த நேரத்தில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களின் சட்டப்பூர்வ டெண்டர் நிலையை திரும்பப் பெற்ற நிலையில், நாட்டின் பொருளாதாரத் தேவையை விரைவாக பூர்த்தி செய்யும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக, ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கம் நிறைவேறியதாலும், மற்ற டினாமினேசன்களில், போதுமான அளவிற்கு பணம் புழக்கத்தில உள்ளதன் காரணத்தினாலும், 2000 ரூபாய் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக, ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரிசர்வ் வங்கி, 2018-19ஆம் ஆண்டிலேயே, 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.

2000 ரூபாய் நோட்டுக்களின் ஆயுள் முடிந்தது

2017ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்கு முன்பே, 2000 ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலானவை வெளியிடப்பட்டு விட்டன. அந்த நோட்டுகளின் ஆயுட்காலம் 4 முதல் 5 ஆண்டு காலங்கள் தான் என்பதால், அதை திரும்பப் பெறுவதற்கு, இதுவே சரியான தருணம் ஆகும் என்று தெரிவித்து உள்ள இந்திய ரிசர்வ் வங்கி, இதன்மூலம், மக்கள் பாதிப்பு அடைய, வாய்ப்பு இல்லை என்று தெரிவித்து உள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் தூய பணக் கொள்கை

மக்களுக்கு, பொருளாதார ஸ்திரத்தன்மை சீரான இடைவெளியில் வைத்திருப்பதை உறுதி செய்வதை கொள்கையாக வகுத்து உள்ளதன் காரணமாக, 2000 ரூபாய் நோட்டுக்கள், காலாவதி ஆக்கப்பட்டு உள்ளதாக, ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளின் சட்டப்பூர்வ டெண்டர் நிலை தொடர்கிறதா?

ஆம். 2000 ரூபாய் நோட்டுக்களின் சட்டப்பூர்வ டெண்டர் நிலை, தொடர்ந்து கொண்டு தான் உள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளை சாதாரணமான பணப் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியுமா?

நிச்சயமாக. மக்கள் தங்களது பணப்பரிவர்த்தனைகளுக்கு தாராளமாக, 2000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தலாம். நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாகவோ, மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை, வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

2000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்?

2000 ருபாய் நோட்டுகளை வைத்து இருப்பவர்கள், மே 23ஆம் தேதிக்குப் பிறகு, அருகில் உள்ள ஏதாவது வங்கி கிளைக்குச் சென்று, அதை 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். மக்கள், இந்த வசதியை, செப்டம்பர் 30ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த வசதி, இந்திய ரிசர்வ் வங்கியின், 19 மண்டல அலுவலகங்களின் வழங்கல் துறைகளிலும், செப்டம்பர் இறுதி வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2000 ரூபாய் நோட்டுக்களை டெபாசிட் செய்வதில், வரம்பு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதா?

KYC விதிமுறைகள் மற்றும் பொருந்தக் கூடிய விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப, 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய, எவ்வித நிபந்தனையும் இல்லை என்று தெரிவித்து உள்ள ரிசர்வ் வங்கி, மக்கள் ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ முடியும் என்று தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: ரூ.2000 நோட்டுக்களை மாற்றுவது எப்படி? ரிசர்வ் வங்கி சொல்லும் யோசனையை கேளுங்க

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.