காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டார். அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு தொண்டர்களிடையே உரையாற்றினர்.
இந்த பயணத்தின்போது, நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் குறித்து பிரியங்கா காந்தி இடிவி பாரத்திற்கு பிரத்தியேகப் பேட்டி அளித்தார். பட்ஜெட் குறித்து அவர், இந்த பட்ஜெட்டில் நடுத்தரவர்க்கத்தினர், விவசாயிகள், இளைஞர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
மேல்தட்டு மக்களுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் பயனுள்ளதாகவே இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. நாட்டு மக்கள் குறித்து ஆளும் பாஜகவுக்கு துளிகூட கவலை இல்லை. இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றிம் அளிக்கிறது என அவர் கூறியுள்ளார்.
மேலும், உத்தரகாண்ட் மக்கள் தங்கள் வாக்கை சிந்தித்து செலுத்த வேண்டும் எனக் கூறிய பிரியங்கா, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமையும்பட்சத்தில் பெண்களுக்கு உரிய அதிகாரமும் முக்கியத்துவமும் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 17ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அங்கு பாஜக தலைமையிலான ஆட்சி தற்போது நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: நவீன இந்தியாவுக்கான பட்ஜெட் இது - பிரதமர் மோடி பெருமிதம்