ETV Bharat / bharat

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் எடை அதிகரிப்பு.. ஆய்வு முடிவு சொல்வது என்ன? - பெண்ணோயியல்

pregnancy time weight issue: கர்ப்ப காலத்தின் போது பெண்களுக்கு ஏற்படும் உடல் எடை அதிகரிப்பானது பிற்காலத்தில் அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்கும் எனும் திடுக்கிடும் தகவலை நேஷனல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் எடை அதிகரிப்பு மரணத்திற்கு வழிவகுக்குமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 8:47 PM IST

ஐதராபாத்: பொதுவாக நம் வீடுகளில் கர்ப்பமாக இருப்பவர்களிடம் இப்போது நீ ஒரு உயிர் அல்ல 2 உயிர், இரண்டுக்கும் சேர்த்துச் சாப்பிட வேண்டும், அப்போது தான் குழந்தையும் ஆரோக்கியமாகப் பிறக்கும் எனக் கூறி அதிக உணவை வழங்குவார்கள். அவ்வாறு கர்ப்பகாலத்தின் போது பெண்கள் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான உணவு அவர்களது எடையை அதிகரிக்கும். ஆனால் இந்த திடீர் எடை அதிகரிப்பு தாய்மார்களுக்குப் பிற்காலத்தில் ஆபத்தையும் ஏற்படுத்தும் என்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.

கர்ப்ப காலத்தில் அதிக எடை அதிகரிப்பின் தாக்கம் பொதுவாகக் குழந்தை பிறப்பதற்கு பிறகான எடை தக்கவைப்பு மற்றும் கர்ப்பகால நீரிழிவு, கர்ப்பத்தால் தூண்டப்பட்ட உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிரசவத்தின் போது அறுவை சிகிச்சை தேவைப்படும் அதிக வாய்ப்பு போன்ற சிக்கல்களுடன் தொடர்புடையது. ஆனால், அதன் நீண்டகால தாக்கங்கள் குறித்து இதுவரை நாம் அறிந்ததில்லை. இந்நிலையில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக (NUS மருத்துவம்) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

அந்த ஆராய்ச்சியில் சாதாரண மற்றும் அதிக உடல் எடை (பாடி மாஸ் இண்டெக்ஸ் (BMI)) உள்ள பெண்களுக்குக் கர்ப்பகாலத்தில் ஏற்படும் உடல் எடை அதிகரிப்பானது, மற்ற காரணங்களால் ஏற்படும் இறப்பு காரணிகளில் 9 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை தொடர்புடையது எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புகளானது தி லான்செட்டில் வெளியிடப்பட்டன.

இதையும் படிங்க: குற்றாலம் மெயின் அருவில் வெள்ளப் பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

கர்ப்ப காலத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பு, எடை இழப்பு, மற்றும் இறப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளை ஆராய்ச்சியாளர்கள் 46,000க்கும் மேற்பட்ட பெண்களின் தரவுகளைக் கொண்டு மதிப்பிட்டுள்ளனர். அதன்படி, கர்ப்பத்திற்கு முந்தைய காலத்தில் (பாடி மாஸ் இண்டெக்ஸ் (BMI)) குறைவான எடை மற்றும் சாதாரண எடை உள்ள பெண்களுக்குக் கர்ப்பகாலத்தின் போது ஏற்படும் அதிக எடை அதிகரிப்பானது இதய நோய்களால் ஏற்படும் இறப்புக்கு 84 சதவீதம் மற்றும் 20 சதவீதம் வரை அதிகரிக்க வழிவகுப்பதாக ஆய்வுகள் கூறியுள்ளது.

அதுபோல அதிக எடை வரம்பில் உள்ள பிஎம்ஐ கொண்ட பெண்களுக்குக் கர்ப்ப காலத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பானது, நீரிழிவு நோயால் ஏற்படும் இறப்பு அபாயத்தை 77 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. கர்ப்ப காலத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பு நிகழ்வு குறித்த சரியான தகவல்களும் மற்றும் ஆய்வுகள் இல்லாததே இதற்குக் காரணம்.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்பானது, 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்தொடரப்பட்ட தரவுகள் மூலம், குழந்தை பெறுவதில் பெண்களின் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் ஒட்டுமொத்த நீண்ட கால ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்கான முக்கிய ஆதாரங்களை வழங்குகின்றன.

மேலும் இது குறித்து NUS மருத்துவத்தில் யோங் லூ லின் மருத்துவப் பள்ளியின் பெண்ணோயியல் மற்றும் மகப்பேறியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் குய்லின் ஜாங் கூறுகையில், “பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமான நீண்ட ஆயுளை அடைதல் ஆகியவை பெண்களின் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே தொடங்க வேண்டும்.

குறிப்பாக, பெண்களின் இனப்பெருக்க வயதிலும், கர்ப்ப காலத்திலும் அவர்களின் ஆரோக்கியம், அவர்களின் ஆயுட்காலத்தின் மீது நீண்ட கால ஆரோக்கிய பாதிப்புகள், அத்துடன் சந்ததியினர் மற்றும் குடும்பத்தின் மீது தலைமுறைகளுக்கு இடையேயான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான பகுதி ஆகும்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆன்மிகத்தை வளர்க்க ஒரு தளம் வேண்டும்: அமைச்சர் பி.கே.சேகர் பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.