ETV Bharat / bharat

Excessive poll spending: தெலங்கானா தேர்தல் - பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிரமாக களமிறங்கும் தேர்தல் ஆணையம்! - தேர்தலின்போது பணப்புழக்கம்

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தலில் சட்டவிரோதப் பணப்புழக்கத்தை தடுக்க 20-க்கும் மேற்பட்ட மத்திய ஏஜென்சிகளுடன் தேர்தல் ஆணையம் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Telangana
தெலங்கானா
author img

By

Published : Jun 30, 2023, 11:01 PM IST

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. அதேபோல், கர்நாடகாவின் வெற்றியைத் தொடர்ந்து தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த வாரம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர். தெலங்கானாவில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அம்மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள், அமலாக்கத்துறை அதிகாரிகள், வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை தேர்தலின்போது சட்டவிரோத பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. சட்டவிரோத பணப்புழக்கத்தைத் தடுக்க மத்திய ஏஜென்சிகளைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட தொகை குறித்தும், தென் மாநிலங்களில் தேர்தலில்போது கணக்கில் வராத சட்டவிரோதமான பணம் செலவு செய்யப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

பொதுவாக தேர்தலின்போது காவல் துறை, கலால் துறை, உளவுத்துறை, வருமான வரித்துறை, ரயில்வே போன்ற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த முறை கூடுதலாக மத்திய ஏஜென்சிகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

குறிப்பாக, ரிசர்வ் வங்கி, மத்திய நேரடி வரிகள் வாரியம், போதைப்பொருள் கட்டுப்பாடு வாரியம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI), அமலாக்க இயக்குநரகம் (ED), இந்திய விமான நிலைய ஆணையம், துறைமுகங்கள் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மத்திய ஏஜென்சிகளின் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. இந்த ஏஜென்சிகள் வழங்கும் உள்ளீடுகளின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் விரைவாக செயல்படும் என்றும், தேர்தலின்போது சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் ஆணையம் இந்த அளவுக்கு தீவிரமாக களம் இறங்குவதற்கு காரணம், தெலங்கானா மாநிலத்தில் கடந்த காலங்களில் நடந்த தேர்தர்களில் கோடிக்கணக்கில் பணப்புழக்கம் இருந்தது. கடந்த சட்டப்பேரவை தேர்தல், முனுகோடு இடைத்தேர்தல், ஹுசூராபாத் இடைத்தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களிலும் கோடிக்கணக்கில் பணம் புழங்கியது. கடந்த சட்டசபை தேர்தலின்போது தெலுங்கானாவில் சுமார் 97 கோடி ரூபாய் அளவுக்கும் பணம் மற்றும் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டன. முனுகோடு இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் சுமார் 600 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும் மதிப்பிடப்படுள்ளது.

இதையும் படிங்க: நெருங்கும் முனுகோடு இடைத்தேர்தல் - மதுவிற்பனை அமோகம் !!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.