முன்னாள் ஹாக்கி வீரர் பிரவீன் ராவ் மற்றும் இரு உறவினர்கள் அவர்களது வீட்டில் இருந்தபோது வருமானவரித் துறை அலுவலரைப்போல வேடமிட்டு வந்த கடத்தல் கும்பல் அவர்களைக் கடத்திச் சென்றுள்ளது.
இதைத்தொடர்ந்து அவர்களை மறுநாள் காலை 3 மணி அளவில் சாலையோரம் விட்டுச் சென்றுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் அவரது சகோதரரும், வழக்கறிஞருமான பிரதாப் குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்தக் கடத்தலுக்கு மூளையாக இருந்தது முன்னாள் அமைச்சர் பூமா அகிலா பிரியா எனத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து முன்னாள் ஹாக்கி வீரரான பிரவீன் ராவ் உள்பட அவரது உறவினர் இருவரை கடத்திக் கொண்டுசென்ற வழக்கில், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும், அல்லகடா தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவுமான பூமா அகிலா பிரியாவையும், அவரது கணவர் பார்காவையும் கைதுசெய்த ஹைதராபாத் காவல் துறையினர், விசாரணை வளையத்திற்குள் வைத்துள்ளனர்.
இது குறித்து ஹைதராபாத் காவல் ஆணையர் அஜ்ஜனி குமார் கூறுகையில், “இந்தக் கடத்தல் வழக்கில் பூமா அகிலா பிரியாவும், அவரது கணவரும் சம்பந்தப்பட்டுள்ளனர். தற்போது இருவரையும் கைதுசெய்துள்ளோம். மேலும், கடத்தலுக்கு உடந்தையாக இருந்தவர்களைத் தேடிவருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க...தோல்வியை ஒப்புக்கொண்டார் ட்ரம்ப்