புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கடந்த நான்கரை ஆண்டுகளாக பணியாற்றிய கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி அரசுக்கு எதிராக செயல்படுவதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில் பிப்ரவரி 16ஆம் தேதி கிரண்பேடி ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பிப்ரவரி 18ஆம் தேதி பொறுப்பேற்று கொண்டார்.
இந்த நிலையில் துணைநிலை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கிரண்பேடி இன்று காலை 10 மணிக்கு ராஜ் நிவாசில் இருந்து புறப்பட்டு கார் மூலம் கோவை சென்றார். அங்கு ஈஷா மையம் சென்று சத்குருவை சந்தித்த பின்னர் விமானம் மூலம் டெல்லி செல்கிறார். பிப்ரவரி 16ஆம் தேதி அவர் நீக்கப்பட்டாலும் மூன்று நாள் ராஜ் நிவாசில் தங்கி இன்று விடைபெற்றார்.
இதையும் படிங்க: கிரண்பேடி ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்தளிக்கப் போகிறாரா 'டாக்டர்' தமிழிசை?