ETV Bharat / bharat

ஒன்றிய அரசின் நோட்டீஸ்: பதிலளித்தார் அலபன் பந்தோபாத்யாய்! - மேற்கு வங்க முன்னாள் தலைமை செயலர் அலபன் பந்தோபாத்யாய்

பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து ஒன்றிய அரசின் நோட்டீசுக்கு பதிலளித்தார் மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாய் பதிலளித்துள்ளார்.

Alapan Bandyopdhayay
Alapan Bandyopdhayay
author img

By

Published : Jun 3, 2021, 11:09 PM IST

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் தலைமை செயலாளர் அலபன் பந்தோபாத்யாய், ஒன்றிய அரசு சார்பில் தனக்கு விடுக்கப்பட்டிருந்த விளக்க நோட்டீசுக்குப் பதிலளித்துள்ளார். அதில், முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படியே தான் செயல்பட்டதாகவும், அதன் காரணமாகவே மே 28ஆம் தேதி நடைபெற்ற பிரதமர் நரேந்திர மோடித் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த மே 28ஆம் தேதி, யாஸ் புயல் பாதிப்பு தொடர்பாக மேற்கு வங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதில் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அன்றையத் தலைமை செயலாளர் அலபன் பந்தோபாத்யாய் பங்கேற்கவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பவே, இதற்கு விளக்கம் அளிக்கக் கோரி அலபன் பந்தோபாத்யாய்க்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் விடுத்தது. மேலும், அவரை ஒன்றியப் பணிக்குத் திரும்பக் கோரி உத்தரவிட்டது.

ஆனால் முதலமைச்சர் மம்தா பானர்ஜி விடுவிக்க மறுத்ததால், பணி ஓய்வு பெற்று, முதலமைச்சர் மம்தாவின் தனி ஆலோசகராகப் பொறுப்பேற்றார். ஐ.ஏ.எஸ். அலுவலர் ஒருவரை வைத்து பிரதமரும் மாநில அலுவலகமும் மாறி மாறி மோதிக்கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: கோவிட்-19 எதிரொலி: ஆண்டு சம்பளத்தை உதறிய முகேஷ் அம்பானி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.