ETV Bharat / bharat

காலை 9 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

9 AM
9 AM
author img

By

Published : Sep 14, 2021, 9:18 AM IST

1.பாஜக அலுவலகத்தில் பணம் எண்ணும் இயந்திரம் எதற்கு - செந்தில்குமார் எம்.பி கேள்வி

பாஜக எம்.எல்.ஏ அலுவலகத்தில் எதற்கு லாபம் என்று எழுதப்பட்டுள்ளதென்றும், பணம் எண்ணும் இயந்திரம் எதற்கு என்றும் தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

2.கழிவுகளை வெளியேற்ற ஸ்டெர்லைட் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு

கரோனா இரண்டாவது அலையின் போது ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டபோது உருவான கழிவுகளை வெளியேற்ற அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

3.அன்புமணி மகள் திருமணம் - முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு

மாநிலங்கவை உறுப்பினரும், பாமக இளைஞரணி தலைவருமான அன்புமணி ராமதாஸின் மகள் திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று (செப்.13) நடைப்பெற்றது.

4.ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவு

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கவும், தரமான அரிசி வழங்குவதை உறுதிப்படுத்தவும் குழு அமைக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

5.பள்ளி மாணவருக்கு கரோனா - சக மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை

மயிலாடுதுறையில் பள்ளி மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் சக மாணவர்கள் 100 பேருக்கு சுகாதாரத்துறையினர் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

6. ”நீட் தேர்வு மசோதா: நல்லதே நடக்கும் என்று நம்புவோம்”

நீட் தேர்விற்கு விலக்கு பெறுவற்கு இயற்றப்பட்ட சட்டத்திற்கு அனுமதி பெறுவது தொடர்பாக குடியரசு தலைவரிடம் யார் சென்று பேசுவது என்பது குறித்தும், தேவைப்பட்டால் அழுத்தம் கொடுப்பதற்கான முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

7. உளுந்தூர்பேட்டை கொலை வழக்கு - 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

உளுந்தூர்பேட்டை அருகே கொரட்டூர் கிராமத்தில் துக்க நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

8. '100 ஜிகா வாட் மாற்று எரிசக்தி' - இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு

மாற்று எரிசக்தி பயன்பாட்டில் 100 ஜிகாவாட் இலக்கை தாண்டிய இந்தியாவுக்கு அமெரிக்க சிறப்பு தூதர் ஜான் கெர்ரி பாராட்டு தெரிவித்துள்ளார்.

9. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அனைவரும் தயாராக வேண்டும் - வெங்கையா நாயுடு

இனிவரும் காலங்களில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து தயாராக வேண்டும் என வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

10. ஆட்டை பலி கொடுத்த விவகாரம்: நடிகர் ரஜினி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார்!

நடிகர் ரஜினி நடித்த ’அண்ணாத்த’ பட கட் அவுட் முன் ஆட்டை பலி கொடுத்து ரத்த அபிஷேகம் செய்த ரஜினி ரசிகர்கள் மீதும், அச்செயலை தூண்டியதாக நடிகர் ரஜினி மீதும் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.