ETV Bharat / bharat

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM - ஈடிவி பாரத் செய்தி

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

1PM
1PM
author img

By

Published : Oct 12, 2021, 12:53 PM IST

1. மாவோயிஸ்ட் பயங்கரவாத பயிற்சி: 6 மாவட்டங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பயங்கரவாத பயிற்சி அளித்த வழக்கில் சென்னை, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தேனி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களின் 12 இடங்களில் என்ஐஏ அலுவலர்கள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

2. பாகிஸ்தான் பயங்கரவாதி டெல்லியில் கைது

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர் டெல்லியில் சிறப்புப் பிரிவு காவலர்களால் இன்று (அக். 12) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

3. 'நிலக்கரி தட்டுப்பாடு... தமிழ்நாட்டில் அவசர காலத் திட்டம் அவசியம்'

தென் மாநிலங்களில் தமிழ்நாடு, வட மாநிலங்களில் மிகக் குறைந்த அளவே நிலக்கரி இருப்பு உள்ளதால், இன்னும் ஒரு சில நாள்களில் முழுமையான மின் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

4. மெரினாவில் தொடரும் சோகம்: இறப்பைத் தடுப்பதற்குப் புதிய அவசர உதவி மையம்!

மெரினா கடற்கரையில் குளிக்க வருபவர்கள் அலையில் சிக்கி மரணம் அடைவதைத் தடுக்கும் வகையில் புதிய அவசர உதவி மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

5. மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு: கோவையில் என்ஐஏ அதிரடி சோதனை

கோவையில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கைதுசெய்யப்பட்ட மூவரின் இல்லங்களில் என்ஐஏ சோதனை மேற்கொண்டுவருகிறது.

6. சிவகங்கையில் என்ஐஏ: மாவோயிஸ்ட் சகோதரர் வீட்டில் ரெய்டு

மாவோயிஸ்ட் சகோதரர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.

7. வாகன ஓட்டிகளே கவனம்

வரும் 13ஆம் தேதிமுதல் தலைக்கவசம் அணியாதவர்களின் இருசக்கர வாகனங்களைப் பறிமுதல்செய்ய காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

8. வருவாய்ப் பற்றாக்குறைக்கு மானியம்: தமிழ்நாட்டிற்கு எத்தனை கோடி வழங்கியது ஒன்றிய அரசு?

தமிழ்நாட்டிற்கு ரூ.183.67 கோடி வருவாய்ப் பற்றாக்குறை மானியத்தை ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. ஏழாவது தவணையாக அக்டோபர் மாதத்தில் இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

9. நீ என் செல்லம் - அக்ஷராவுக்கு வாழ்த்துத் தெரிவித்த சுருதி

அக்ஷரா ஹாசன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில் அவரது சகோதரி சுருதி ஹாசன் சமூக வலைதளத்தில் வாழ்த்துத் தெரிவித்து இருவரும் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

10. அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க - அண்ணாத்த டீசர் தேதி அறிவிப்பு

அண்ணாத்த படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.