உலக அளவில் இணைய இதழியல் துறையில் (டிஜிட்டல் பப்ளிஷிங்) புதுமைகளை புகுத்தி, சாதனைகளை நிகழ்த்திவரும் செய்தி நிறுவனங்களை அங்கீகரிக்கும் வகையில் உலக செய்தித்தாள்கள் மற்றும் செய்தி வெளியீட்டாளர்களின் சங்கம் (வேன்-இஃப்ரா) சார்பில் டிஜிட்டல் மீடியா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.
ஆசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா என 5 பிராந்தியங்கள் வாரியாக சிறந்த செய்தி இணையதளம், டிஜிட்டல் விளம்பர பரப்புரை, இணைய வழி காணொலி, லைப் ஸ்டைல் இணையதள சேவை, வாசகர் பங்கேற்பு என்பன உள்ளிட்ட 9 பிரிவுகளின் இந்த டிஜிட்டல் மீடியா விருது வழங்கப்பட்டுவருகிறது.
அந்த வகையில், 2020 ஆம் ஆண்டுக்கான தெற்காசிய டிஜிட்டல் மீடியா விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் சிறந்த செய்தி கல்வி அறிவித்தல் பிரிவில் ‘ஈடிவி பாரத்’ செய்தி இணையதளம் விருதை வென்றுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் நெட்வொர்க்காக இயங்கிவரும் ஈடிவி பாரத், நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் செய்திகளை பெற்று அனைத்து குடிமக்களுக்கும் கொண்டு சேர்க்கும் சீரிய பணியில் ஈடுபட்டுவருகிறது.
குரலற்றவர்களின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் ஈடிவி பாரத், டிஜிட்டல் டிவைட் காரணமாக ஆன்லைன் கல்வி அணுகலைப் பெற வாய்ப்பற்ற பின்தங்கிய கிராமப்புற வறிய ஏழை குழந்தைகள் எதிர்கொண்ட பிரச்சினைகளை நாடு முழுவதும் ஒரு விரிவான மெய்மை மூலம் எடுத்துரைத்தது. (டிஜிட்டல் டிவைட் என்பது நகர்ப்புறங்களில் வாழும் உயர் நடுத்தர வர்க்க மக்களுடன் ஒப்பிடும்போது, கிராமப்புற வறிய ஏழை மக்கள் இடையே வளர்ந்து வரும் இடைவெளியைக் குறிக்கிறது)
![ETV Bharat wins prestigious South Asian Digital Media award](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10873980_asdsa.jpg)
கரோனா பெருந்தொற்று நோய் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள், விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டபோது, ஆன்லைன் பயிற்றுவிப்பு என்பது கல்வி புகட்டல் வழிக்கான முக்கிய ஆதாரமாக மாறியது. ஆனால், போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் பல மாணவர்கள் அதற்கான வாய்ப்பை இழந்தனர்.
பொதுக்கல்வி முறை மீதான நம்பிக்கை பெருமளவில் சிதைந்தபோது, நாடு முழுவதும் இருந்து மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையப்படுத்தி தொழில்நுட்ப சவால்களை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்த ஈடிவி பாரத் அவசியத்தை எடுத்துரைத்தது.
இதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளில் சாதகமான தாக்கம் ஏற்பட்டது. நிலைமைகளை சரிசெய்ய மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் அரசியல் நிர்வாகங்களும், தனியார் நிறுவனங்களும் முன்வந்தன என்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : தமிழ்நாடு, கேரளாவில் பாஜக வெற்றி பெறும் - முரளிதர் ராவ் நம்பிக்கை!