ETV Bharat / bharat

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - 7 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

7AM
7AM
author img

By

Published : Nov 13, 2021, 7:23 AM IST

1. சிறுமிகளுக்கு தொந்தரவு; வெள்ளிக்கிழமை சாமியாருக்கு வெள்ளிக்கிழமை தீர்ப்பு!

பாலியல் குற்றச்சாட்டில் போக்சோ வழக்கில் கைதான முதியவருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

2. மழை. வெள்ளம் - நிவாரண உதவிகள் வழங்கிய ஈபிஎஸ்

செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு, பொது மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

3. வேலூரில் கனமழை - பொதுமக்கள் அவதி

வேலூரில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர், அங்குள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

4. தமிழ்நாட்டின் முதல் புனிதராகிறார் தேவசகாயம் - அடுத்த ஆண்டு மே மாதம் வாடிகனில் விழா

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவசகாயம் தமிழ்நாட்டின் முதல் புனிதராகிறார். அடுத்த ஆண்டு மே 15ஆம் தேதி வாடிகனில் நடைபெறவுள்ள ஆன்மிக நிகழ்வில் போப் ஆண்டவர் புனிதர் பட்டத்தை வழங்குகிறார்.

5. உலக கருணை தினம்...

நாடு முழுவதும் இன்று உலக கருணை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

6. பள்ளிகளில் பஞ்சாபி கட்டாயம், மீறினால் அபராதம்!

பஞ்சாப் மாநிலத்தில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பஞ்சாபி கட்டாயம் என அம்மாநில முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி அதிரடியாக அறிவித்துள்ளார்.

7. இந்தியா 75 - காலனியாதிக்கத்திற்கு எதிராக வெகுண்டெழுந்த சிற்றரசி!

கர்நாடக மாநிலம் கிட்டூர் மற்றும் உல்லாலா என்ற சிறு பிராந்தியத்தை ஆண்ட ராணிகள் சென்னம்மா மற்றும் அப்பக்கா. சிற்றரசிகளாக இருந்தாலும் இவர்கள் ஐரோப்பிய காலணி ஆதிக்கத்தை துணிவுடன் எதிர்த்தவர்கள்.

8. ஏழு ஆண்டுகளில் வங்கித்துறையில் வரலாறு காணாத சீர்திருத்தம் - பிரதமர் மோடி பெருமிதம்

கடந்த ஏழு ஆண்டுகளில் வாராக்கடன், டிஜிட்டல் பரிவர்த்தனை உள்ளிட்டவற்றில் வரலாறு காணாத சீர்திருத்தத்தை அரசு மேற்கொண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

9. பட்டப்பகலில் வழிப்பறி - தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

நாமக்கல் அருகே லாரி ஓட்டுனரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

10.கங்கனாவிற்கு வழங்கிய பத்ம விருதைத் திரும்பப் பெற வலியுறுத்தல்

இந்தியாவிற்கு கிடைத்த சுதந்திரம் குறித்து தன்னுடைய சமீபத்திய கருத்தால் சர்ச்சைக்குள்ளான கங்கனா ரனாவத்துக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை திரும்பப் பெற வேண்டும் என பலர் சமூக வலைதளங்களில் வலியுறுத்தியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.