ETV Bharat / bharat

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM - ஈடிவி பாரத் செய்திகள்

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

1PM
1PM
author img

By

Published : Oct 21, 2021, 12:53 PM IST

Updated : Oct 21, 2021, 1:43 PM IST

1. மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர்!

சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிகிச்சைக்காக இன்று (அக். 21) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2. 'வைகோ விதைத்த மரத்தை வெட்ட மனமில்லை'- மதிமுக ஈஸ்வரன் ராஜினாமா!

“நான் நேசிக்கும் தலைவர் வைகோ, என் உள்ளத்தில் பல அடிப்படை கொள்கைகளை விதைத்து விட்டார். அது இன்று மரமாகிவிட்டது. அதை என்னால் வெட்ட இயலவில்லை என்று மதிமுக மாநில இளைஞரணி செயலாளராக இருந்த ஈஸ்வரன், தற்போது மதிமுகவில் இருந்து விலகியுள்ளார்.

3. 100 கோடி கரோனா தடுப்பூசி.. இந்தியா வரலாற்று சாதனை!!

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தவணைகளின் எண்ணிக்கை 100 கோடியை (1 பில்லியன்) தாண்டியுள்ளது.

4. ரெய்டில் சிக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கிரிப்டோகரன்சியில் முதலீடு? - லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை!

ஊழல், சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளில் (மெய்நிகர் பணம்) முதலீடு செய்துள்ளார்களா என லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

5. இதுக்கு ஒரு எண்டே கிடையாதா - விலை உயர்வு

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 103.61 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

6. 20 நாள்களுக்கு பின் 10 நிமிடங்கள்: சிறையில் மகனை சந்தித்த ஷாருக் கான்!

போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகன் ஆர்யன் கானை, நடிகர் ஷாருக் கான் இன்று காலை 10 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்.

7. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒரு வருடத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது - கே.என்.நேரு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒரு வருடத்திற்கு தேவையான தண்ணீர் உள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

8. இந்தியக் காவலர் நினைவுநாள்

வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

9. ஈடிவி பாரத் செய்தி எதிரொலி: பொள்ளாச்சி வழக்கில் எஸ்.ஐ., உள்பட 7 காவலர்கள் சஸ்பெண்ட்!

பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில், குற்றவாளிகளுக்கு சலுகை காட்டியதாக சேலம் ஆயுதப்படையைச் சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ., உள்பட 7 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

10. ஹிட்டான டாக்டர் - படக்குழுவுடன் கொண்டாடிய சிவகார்த்திகேயன்

டாக்டர் திரைப்படம் வெற்றியடைந்த நிலையில் சிவகார்த்திகேயன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

Last Updated : Oct 21, 2021, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.