புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நமது நாட்டின் 75- வது சுதந்திர தினம் இன்று(ஆக. நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக. 15) காலை தேசியக் கொடியேற்றி வைத்து, உரையாற்றுகிறார்.
செங்கோட்டையில் பிரதமர்

நமது நாட்டின் 75- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து, உரையாற்றுகிறார்.
சபரிமலை நடை இன்று திறப்பு

சபரிமலை நடை இன்று(ஆக. 15 மாலை திறக்கிறது. நாளை (ஆக.16 )நிறை புத்தரிசி பூஜையும், நாளை மறுநாள் (ஆக.17 )முதல் ஆவணி பூஜைகளும் நடைபெறுகிறது.
நீட் தேர்வு விண்ணப்ப கட்டணம் அவகாசம் நீட்டிப்பு

நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் செலுத்தும் அவகாசம் நேற்று(ஆக.14) மதியதுடன் முடிவடைந்த நிலையில், இன்று(ஆக.15)இரவு 11.50 மணி வரை அவகாசம் வழங்கி தேசிய தேர்வு வாரியம் (என்டிஏ) அறிவித்துள்ளது.
டி.என்.பி.எல் இறுதி ஆட்டம்

டி.என். பி.எல் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று (15-ம் தேதி ) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது . இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் திருச்சி வாரியர்ஸ் அணி முதல் முறையாக இறுதிப்போட்டியில் ஆடுகிறது.