ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பு #ETV Bharat News Today - august 21 weather

ஆகஸ்ட் 21ஆம் தேதியின் நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.

NEWS TODAY
NEWS TODAY
author img

By

Published : Aug 21, 2021, 7:21 AM IST

ஓணம் நல்வாழ்த்துகள்

கேரள மக்களின் அறுவடைத் திருவிழாவான ஓணம் பண்டிகை இன்றுமுதல் 10 நாள்களுக்கு கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பிரபலங்கள் எனப் பலர் கேரள மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

ஓணம்
பூக்கோலம்

முதலமைச்சர் ஆலோசனை

தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், பள்ளிகள் திறப்பு குறித்தும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

mk stalin
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

இரவிலும் தாஜ்மஹால்

டெல்லியில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற தாஜ்மஹாலை இரவில் பார்வையிடுவதற்கு இன்றுமுதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தாஜ்மஹால், taj mahal
தாஜ்மஹால்

இன்றைய வானிலை

இன்று கடலூர், விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது கன மழையும் இருக்கக்கூடும்.

வானிலை, weather
வானிலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.