ETV Bharat / bharat

தொழிலாளர்களின் இறப்பு காப்பீட்டுத் தொகை 7 லட்ச ரூபாயாக உயர்வு! - தொழிலாளர் வருங்கால வைப்புநிதி

சேமநல வைப்பு நிதி ஊழியர்களுக்கான குறைந்தபட்ச இறப்புக் காப்பீட்டுத் தொகை 2.5 லட்ச ரூபாயாகவும், அதிகபட்ச இறப்புக் காப்பீட்டுத் தொகை ஏழு லட்ச ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

epfo hikes maximum death insurance cover

author img

By

Published : May 20, 2021, 7:06 PM IST

டெல்லி: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் ஊழியர் இறப்புக் காப்பீட்டுத் தொகையை ஏழு லட்ச ரூபாயாக உயர்த்தி இருக்கிறது.

நாட்டில் கோவிட்-19 தொற்று மரணங்கள் உயர்ந்து கொண்டே போய்க் கொண்டிருப்பதை மனதில் இருத்திக் கொண்டு, தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் (ஈபிஎஃப்ஓ) ஊழியர்களின் வைப்புசார் காப்பீட்டுத் திட்டத்தின் (ஈடிஎல்ஐ) கீழ் ஊழியர்களுக்கான இறப்புக் காப்பீட்டுத் தொகையின் அதிகபட்ச விகிதத்தையும், குறைந்த பட்ச விகிதத்தையும் உயர்த்தி உள்ளது.

சமீபத்தில் அரசு இதழில் (கெஜட்டில்) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி, இந்தச் சேமநல நிதி ஊழியர்களுக்கான குறைந்தபட்ச இறப்புக் காப்பீட்டுத் தொகை 2.5 லட்ச ரூபாயாகவும், அதிகபட்ச இறப்புக் காப்பீட்டுத் தொகை ஏழு லட்ச ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

இந்தப் புதிய தொகை விகிதங்கள் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதியிலிருந்து மூன்று ஆண்டுகள் வரைக்கும் நடைமுறையில் இருக்கும் என்று அரசாணைச் செய்தி சொல்கிறது.

ஊழியர்களின் வைப்புசார் காப்பீட்டுத் திட்டம் (ஈடிஎல்ஐ) என்றால் என்ன?

மத்திய அரசாங்கம் 1976ஆம் ஆண்டில் ஊழியர்களின் வைப்புசார் காப்பீட்டுத் திட்டத்தை (ஈடிஎல்ஐ) அறிமுகப்படுத்தியது. தனியார்துறை ஊழியர் ஒருவர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்னும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தத் திட்டம் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் எல்லா ஊழியர்களுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில், ஊழியர்கள் தங்கள் பங்கிற்கு பணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் முதலாளிகள் குறிப்பிட்ட ஒரு தொகையைச் செலுத்த வேண்டும்.

ஒரு நிறுவனம் ஈடிஎல்ஐயை விடச் சிறந்த வேறொரு காப்பீட்டு நிறுவனத் திட்டத்தில் தனது ஊழியர்களைக் கொண்டு சேர்த்து விட்டால், அது தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் இறப்புக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளலாம் என்று தொழிலாளர் வருங்கால வைப்புநிதிச் சட்டம் - 1952 சொல்கிறது.

பொதுவாக குழு காப்பீட்டுத் திட்டங்களை நாடும் நிறுவனங்கள் இந்த ஈடிஎல்ஐ திட்டத்திலிருந்து விலகிக் கொள்கின்றன.

ஒரு பொது மதிப்பீட்டின்படி, தொழிலாளர் வருங்கால வைப்புநிதியில் இருக்கும் ஐந்து கோடி உறுப்பினர்களில் 20 லட்சம் பேர் இந்த வைப்புசார் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்திருக்கிறார்கள்.

ஊழியர்களின் வைப்புசார் காப்பீட்டுத் திட்டம் எப்படி செயல்படுகிறது?

15,000 ரூபாய்க்கும் கீழாக அடிப்படைச் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் இந்த ஈடிஎல்ஐ திட்டத்தில் சேரலாம். இந்தத் திட்டத்தின் கீழ், தொழிலாளியின் அடிப்படைச் சம்பளத்தில் 0.5 விகிதாச்சாரம் அல்லது 75 ரூபாயை மாதாமாதம் ஒவ்வொரு தொழிலாளிக்காகவும் முதலாளிகள் செலுத்த வேண்டும்.

ஈடிஎல்ஐ திட்ட உறுப்பினரான ஒருவர் மரணம் அடையும் பட்சத்தில் அவரது அடிப்படைச் சம்பளம், அகவிலைப்படி மற்றும் தொழிலாளர் வைப்புநிதிக் கணக்கில் இருக்கும் அவரது மிச்சத்தொகை ஆகியவற்றின் அடிப்படையில் அவரது குடும்பத்தினர்க்கு நிதி பலன்கள் அளிக்கப்படும்.

தற்போது திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்கள் 2.5 லட்சத்திலிருந்து 6 லட்ச ரூபாய் வரையிலான இறப்புக் காப்பீட்டுத் தொகையைப் பெற முடியும்.

இறந்துபோன ஊழியரின் வாரிசு என்று எவர் பெயரும் விண்ணப்பத்தில் அதாவது ‘நாமினி’ பகுதியில் இல்லை என்றால் அவரது சட்டப்படியான வாரிசுகள் இறப்புக் காப்பீட்டுத் தொகைக்கு உரிமை கோரலாம்.

இந்த இறப்புக் காப்பீட்டுத் திட்டத்தின் நிதி பலனைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட ஊழியர் தனது மரணத்திற்கு முன்பு குறைந்தது 12 மாதங்களாவது ஊழியர் வைப்புசார் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். இந்த 12 மாதங்களில் அவர் வெவ்வேறு நிறுவனங்களில் பணி செய்திருந்தாலும் பரவாயில்லை என்ற விதியும் இந்தத் திட்டத்தில் இருக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.