ETV Bharat / bharat

இத்தாலி வீரர்கள் துப்பாக்கிச் சூடு; படகு உரிமையாளர் பதிலளிக்க உத்தரவு! - Enrica Lexie Case

இத்தாலி வீரர்கள் 2012இல் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழ்நாடு மீனவர்கள் இருவர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் படகின் உரிமையாளருக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதற்கு எதிராக பாதிக்கப்பட்ட 7 மீனவர்கள் தொடர்ந்த வழக்கில், படகின் உரிமையாளர் மூன்று வாரத்திற்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
author img

By

Published : Sep 28, 2021, 5:13 PM IST

டெல்லி: கேரளத்தின் கொல்லம் மீன்பிடித் துறைமுகம் அருகே இந்திய கடல் எல்லைக்குள்பட்ட அரபிக்கடல் பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்ட மீனவர் பிரடி என்பவருக்குச் சொந்தமான செயின்ட் ஆண்டனி விசைப்படகில் 11 மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, `என்ரிகா லாக்ஸி' என்ற இத்தாலி நாட்டு எண்ணெய் சரக்குக் கப்பலில் இருந்த பாதுகாப்புப் படையினர், கடல் கொள்ளையர்கள் என நினைத்து செயின்ட் ஆண்டனி மீன்பிடிப் படகை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில், கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறையைச் சேர்ந்த அஜீஸ்பிங்க், கேரளாவில் வசித்துவந்த குமரி மாவட்டத்தின் ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்த ஜெலஸ்டின் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இரு மாலுமிகள் கைது

மேலும், படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 9 மீனவர்கள் காயமுற்றனர். இது குறித்து கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் நீண்டகரை கடலோர காவல் நிலையத்தில் இத்தாலி மாலுமிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட இத்தாலி கப்பலின் மாலுமிகளான மசிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர் கிரோனே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக இந்த வழக்கை விசாரிக்க ஒன்றிய அரசுக்கு உரிமையில்லை என்று இத்தாலி தரப்பு வாதிட்டது. இந்த வாதத்தை நிராகரித்த எர்ணாக்குளம் மாவட்ட நீதிமன்றம், இத்தாலி மாலுமிகள் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது. பின்னர் இந்த விவகாரம் சர்வதேச நீதிமன்றத்துக்கு சென்றது.

சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பு

இத்தாலி அரசு சர்வதேச நீதிமன்றத்தில், துப்பாக்கிச்சூடு 22 கடல் மைல் தூரத்தில் நடந்ததாகவும், 21 கடல் மைல் தூரம் மட்டுமே இந்தியாவின் எல்லை எனவும் வாதிட்டது. அதற்கு பதிலளித்த இந்திய அரசு தரப்பினர், 200 கடல் மைல் வரை இந்தியாவின் சிறப்பு பொருளாதார பகுதி எனவும் இந்த வழக்கை தாங்கள் விசாரிக்க முழு அதிகாரம் உண்டு எனக் கூறியது.

இந்த விவகாரத்தில் கடந்த மே மாதம் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதில், 200 கடல் மைல்வரை இந்தியாவின் சிறப்பு பொருளாதாரப் பகுதி என்பதை உறுதிசெய்த நீதிமன்றம், இந்திய கடலுக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டது இத்தாலி கப்பலின் குற்றம் எனத் தீர்பளித்தது.

அதில், இவ்விவாகரம் தொடர்பாக இந்தியா, இத்தாலியிடம் இழப்பீடு கோரலாம் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதனடிப்படையில், இத்தாலியிடமிருந்து 10 கோடி ரூபாயை இந்திய அரசு இழப்பீடாக பெற்றது.

இழப்பீடு கோரி மீனவர்கள் மனு

இந்த தொகையில், உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 கோடி வீதம் பிரித்துக்கொடுக்கப்பட்டது. மீதமிருந்த இழப்பீட்டுத் தொகையை காயமடைந்த மீனவர்களுக்கு வழங்காமல், படகின் உரிமையாளருக்கு வழங்க கேரள அரசு முயற்சித்தது. இதை எதிர்த்து செயின்ட ஆண்டனி படகில் இருந்த 7 மீனவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அம்மனுவில், "இத்தாலி அரசிடம் இருந்து பெறப்பட்ட இழப்பீட்டில் எங்களுக்கு ஒரு ரூபாய் கூடக் கொடுக்கப்படவில்லை. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அளித்த இழப்பீட்டை தவிர்த்து மீதம் உள்ள இரண்டு கோடி ரூபாயில் இருந்து உரிய இழப்பீடு எங்களுக்கு வழங்கப்பட வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், நேற்று (செப். 27) நடைபெற்ற இம்மனு குறித்த விசாரணையில் செயிண்ட் ஆண்டனி படகு தரப்பினர், இதுகுறித்து முடிவெடுக்க கால அவகாசம் கேரியுள்ளனர். இதையடுத்து, மூன்று வாரங்கள் கால அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு ஆறு வாரத்தில் மீ்ண்டும் விசாரணைக்கு வருகிறது. ஏற்கனவே மீதமுள்ள ரூ.2 கோடியை படகின் உரிமையாளருக்கு அளிக்கும் உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: அமித் ஷாவை சந்திக்கிறாரா அமரீந்தர் சிங்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.