ETV Bharat / bharat

திமுகவுடனான தொகுதிப்பங்கீட்டில் ஒரிரு நாளில் முடிவு! - நாராயணசாமி - காங்கிரஸ் திமுக கூட்டணி

புதுச்சேரி: காங்கிரஸ், திமுக தொகுதிப் பங்கீடு ஒரிரு நாட்களில் முடிவுக்கு வரும் என இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

narayanasamy
narayanasamy
author img

By

Published : Mar 8, 2021, 6:35 PM IST

புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக இடையே தொகுதிப்பங்கீடு குறித்து இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை, காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோரும், திமுக சார்பில் மாநில அமைப்பாளர்கள் சிவா மற்றும் சிவக்குமாரும் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தைக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, ”காங்கிரஸ்-திமுக கூட்டணியின் இன்றைய பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது திமுக கேட்ட தொகுதிகள், திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் பரிமாறப்பட்டன. தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி முடிவு ஒரிரு நாட்களில் தெரியும்” என்றார்.

திமுகவுடனான தொகுதிப்பங்கீட்டில் ஒரிரு நாளில் முடிவு! - நாராயணசாமி

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த நாராயணசாமி, பாஜகவின் மிரட்டலுக்கு பயந்தும், நிர்பந்தத்தாலுமே காங்கிரஸ் கட்சியிலிருந்து சிலர் வெளியேறுவதாகக் கூறினார்.

இதையும் படிங்க: தென் மாவட்டங்களில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.