ETV Bharat / bharat

மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிப்பது ஊக்கமாக உள்ளது - உமர் அப்துல்லா

author img

By

Published : Nov 28, 2020, 11:56 PM IST

குளிர்ந்த வானிலை இருந்த போதிலும், மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்களுக்கான தேர்தலில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்திருப்பது ஊக்கமளிக்கிறது என தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று(நவ.28) நடைபெற்றது. டிசம்பர் 19ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறும் என, ஜம்மு காஷ்மீர் தேர்தல் ஆணையராக, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கே.கே.சர்மா அறிவித்திருந்தார். இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லா கூறுகையில், "குளிர்ந்த வானிலை இருந்தபோதிலும், மாவட்ட மேம்பாட்டு கவுன்சில்களுக்கான தேர்தலில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களித்தனர். இது பெரும் ஊக்கமாக இருக்கிறது.

அடுத்தடுத்த கட்ட வாக்குப்பதிவின் போதும் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்காளிப்பார்கள் என நம்புகிறேன்" என்றார். காலையில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தாலும், வாக்குப்பதிவு தொடங்கிய இரண்டு மணி நேரத்தில் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாக்கு மையத்தில் குவியத் தொடங்கினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.