சான் பிரான்சிஸ்கோ: டிவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது முதல் தொடர் அதிரடி நடவடிக்கைகளில் எலான் மஸ்க் ஈடுபட்டு வருகிறார். அதில் ஒன்று, பயனர்களின் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்த ப்ளூ டிக் சேவையை கட்டணமாக்கியது.
ப்ளூ டிக் வசதி பெற கட்டணம் என்ற அறிவிப்பை அடுத்து டிவிட்டரில் பல்வேறு மோசடிகள் மற்றும் ஆள்மாற்றட்டங்கள் தலை தூக்கத் தொடங்கின. இதையடுத்து ப்ளூ டிக் சேவையை தற்காலிகமாக நிறுத்திய மஸ்க் மீண்டும் நவம்பர் 29ஆம் தேதி முதல் மாதத்திற்கு 8 டாலர் விலையில் ப்ளு டிக் வெரிபைடு வசதியை பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்தார்.
இந்நிலையில், மோசடி மற்றும் ஆள்மாறாட்டங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் அதிக நம்பிக்கை ஏற்படும் வரை ப்ளூ டிக் வசதியின் மறுவெளியீட்டை நிறுத்துவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். மேலும் தனிநபர், நிறுவனங்களுக்கு வெவ்வேறு வண்ணங்களில் ப்ளூ டிக் வசதி வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாக மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 2 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்த உதயநிதி