மத்தியப்பிரதேசம் : மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள சிவ் பீகார் காலனியில் வசித்து வருபவர், சஞ்சீவ் கனக்னே. இவருக்கு ரூ.3,419 கோடி மின்கட்டணம் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்த மிகப்பெரிய தொகையைக் கண்ட அவரது குடும்பம் அதிர்ச்சியில் உறைந்தது.
இதனையடுத்து சஞ்சீவ் மின்சாரத் துறையை தொடர்பு கொண்டு, " மின் கட்டணம் ரூ.3,000 கோடிக்கு மேல் உள்ளது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மின்சார துறையினர், கட்டணத்தை திருத்தம் செய்து சுமார் ரூ.1,300 என நிர்ணயம் செய்தனர். இது அலுவலர்களின் தவறு எனவும், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக உதவி வருவாய் அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் இளநிலை பொறியாளருக்கும் காரணம் தெரிவிக்க நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து பதிலளித்த எரிசக்தி துறை அமைச்சர் பிரதுமன் சிங் தோமர், "தவறு இருந்ததால், உடனடியாக சரி செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் என்ன வேண்டும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் பிளிப்கார்ட் குடோனில் அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை!