திரிபுரா மாநிலம், கோவாய் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் தங்களது ஆண் நண்பர்கள் இருவருடன் கட்டியாபரி பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு, அவர்களுடன் மேலும் ஆறு பேர் சேர்ந்து சிறுமிகளை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் இதுகுறித்து சிறுமிகள் உறவினரிடம் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில், உறவினர்கள் சம்பாஹவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இப்புகாரின் பேரில், ஃபுல்டாலி பகுதியைச் சேர்ந்த ஜாகு (21), பிமல் (22), மைக்கேல் (19), ரிஷிதா (19), பிகாஷ் (22), நிதேஷ் (21), ஜுவல் (19), பீரேஷ் (19) ஆகிய எட்டு பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது ஐபிசி பிரிவு 341/376(டி) / 506இன் கீழ் போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 'போக்சோ வழக்குகளில் சமரசத்தில் ஈடுபடும் பெற்றோர்கள் மீது நடவடிக்கை' - துணை ஆணையர்